Type Here to Get Search Results !

காற்று மாசால் 3 ஆண்டுகளில் 5 லட்சம் பேர் மரணம்



இந்தியாவதில் காற்று மாசு காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் பேர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

லான்செட் என்ற அமைப்பின் ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டில் இறந்த 5 லட்சம் பேரில் 97 ஆயிரம் பேர் நிலக்கரி புகையால் இறந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தி முறையை கைவிடாவிட்டால் காற்று மாசு காரணமாக இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கும் என அந்த அறிக்கை கூறியுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியை அச்சுறுத்தி வரும் காற்று மாசு, தற்போது சென்னையையும் கடுமையாக பாதிக்க தொடங்கியது. கடந்த வாரம் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 230 ஆக உள்ள நிலையில், சென்னையில் காற்று மாசு 256 ஆக இருந்தது.


Top Post Ad

Below Post Ad