நம் இந்தியாவின் விண்வெளித்துறையான இஸ்ரோ, உலக அளவில் பிரசித்தி பெற்றது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது அதற்கு நிகரான படிப்பு தகுதியஒ கொண்டவர்கள் சம்பத்தப்பட்ட துறையில் வேலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துறையில் 5 வருடம் அனுபவம் வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்புகள் விவரம் : இஸ்ரோவில் உள்ள மொத்த காலியிடங்கள் : 90 இஸ்ரோவில் உள்ளபணி விவரங்கள் பின்வருமாறு : கார்பென்டர் - 1 கெமிக்கல் : 10 எலக்ட்ரீசியன் - 10 எலக்ட்ரானிக் மெக்கானிக் : 2 பம்ப் ஆப்ரேட்டர் மற்றும் மெக்கானிக் : 6 ரெஃப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிஷனிங் - 05 கெமிக்கல் : 1 ஃபிட்டர் :2 பாய்லர் அட்டெனன்ட் - 02 மெக்கானிக்கல் : 02 எலக்ட்ரானிக் மெக்கானிக் - 01 இதில், வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் : ரூ.21,700 முதல் ரூ.69,100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்காணல் நடத்தி அதன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், இந்த எழுத்துத் தேர்வுகளுக்கான தேதியை இஸ்ரோ இன்னும் அறிவிக்கவில்லை. மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதார்கள் isro.gov.in என்ற இணையதளத்திற்குச் என்று ட்நவம்பர் 29-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிகப்பட்டுள்ளது.