இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக அரசியல் கட்சியை பின்னுக்கு தள்ளி 'நோட்டா' இரண்டாம் இடம் பிடித்த சம்பவம் நிகழ்நதுள்ளது.
கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வியாழனன்று காலை வெளியாகின. இதில் மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி பெருவெற்றி பெற்றுள்ளது.
இதில் சுவராஸ்யமான் ஒரு விஷயம் நிகழ்நதுள்ளது. லத்தூர் (ரூரல்) தொகுதியில் காங்கிஸ் சார்பாக முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் இளைய மகனான தீரஜ் தேஷ்முக் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சிவசேனாவின் ரவி ராம்ராஜே தேஷ்முக் போட்டியிட்டார்.
வியாழன்று வெளியான முடிவுகளில் தீரஜ் 1, 34, 615 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரவி ராம்ராஜே 13, 459 வாக்குகளை பெற்றார். ஆனால் இரண்டாம் இடம் அவருக்கு கிடைக்கவில்லை.
இந்த தொகுதியில் 'நோட்டா' என்னும் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்னும் பட்டனை வாக்கு எந்திரத்தில் 27,449 பேர் பயன்படுத்தியுள்ளனர்.
இதன்மூலம் தீரஜ் நோட்டாவை 1, 04, 422 வாக்குகள் வித்தியாத்தில் வென்றுள்ளார்.
இதன்மூலம் இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக அரசியல் கட்சியை பின்னுக்கு தள்ளி நோட்டா' இரண்டாம் இடம் பிடித்த சம்பவம் நிகழ்நதுள்ளது