Type Here to Get Search Results !

அழுகிய நிலையில் சுஜித் உடல் மீட்பு - மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது








 திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்துவிட்டன. குழந்தை இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் உடல் அதிக அளவில் சிதைந்துவிட்டது தெரியவந்தது. நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இந்த தகவலை தெரிவித்தார்.














இதனையடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுஜித்தின் உடலை மீட்டு வெளியே எடுத்தனர்.

பின்னர், அந்த உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சுஜித்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான், குழந்தை உயிரிழந்த நேரம் குறித்த தகவல் தெரியவரும்

ஏமாற்றிவிட்டாயே சுஜித்..” - கண்ணீர் சிந்தும் தமிழகம்!

தமிழக மக்கள் மத்தியில் குழந்தை சுஜித்தின் மரணம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் இந்த மரணம் மக்கள் மனங்களில் இருந்து நீங்க நீண்ட நாட்கள் ஆகும். இந்த அனுபவத்தில் இருந்தாவது உரிய படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம்.


Top Post Ad

Below Post Ad