Type Here to Get Search Results !

இடி மின்னலில் இருந்து பாதுகாப்பு பெற !! 🌧






தவிர்க்க முடியாத நேரங்களில்
வீட்டில் இல்லாமல் வெளியில் இருக்கும் போது, இடி மின்னல் வெட்டும் நேரங்களில் நம்மை பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகள்..

படம்1:

வெட்ட வெளியாக இருந்தால் கூட்டமாக நில்லாமல் தனித்தனியாக நிற்கவும். முடிந்தால் 100 அடி இடைவெளி விட்டு நின்று கொள்ளலாம் அல்லது குத்துக் கால் வைத்து அமர்ந்து கொள்ளுங்கள்..

படம்2:

மரத்தின் அடியில் நிற்க வேண்டாம். குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரம் அல்லது அதற்கும் அதிகமாக மரத்திலிருந்து தள்ளி நிற்கவும்

படம்3:

கட்டிடங்களின் பக்கவாட்டு சுவர்களில் ஒதுங்கி நிற்க வேண்டாம். கட்டிடத்திற்கு உள்ளே இருப்பது பாதுகாப்பானது.

படம்4:

கார் போன்ற வாகனங்களில் உள்ளே இருக்கும்போது இடி மின்னல் வெட்டினால் வாகனத்திற்கு உள்ளேயே இருப்பது பாதுகாப்பானது. பயத்தில் வாகனத்தை விட்டு வெளியே வந்தால் நிலத்தில் பாயும் இடி மின்னலின் தாக்கம் நம்மையும் தாக்கும்.

பகிர்ந்து கொள்ளுங்கள். மழை காலம் இப்போது தொடங்கியுள்ளதால் தேவையான தகவல் இது...

Top Post Ad

Below Post Ad