சீனா அதிபர் இன்று சென்னைக்கு வர உள்ளார். இந்நிலையில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களுக்கு இந்திய பிரதமர் மோடி சீன அதிபரை சந்தித்து பேச உள்ளதோடு, இந்த சந்திப்பு இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னைக்கு வர உள்ள சீன அதிபர் குறித்தும், தமிழகத்தின் பெருமை குறித்தும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் டிவிட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும் என கூறியுள்ளார்.
மேலும், கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் எனவும், தான் சென்னை வந்திறங்கியுள்ளேன் எனவும் மோடி கூறியுள்ளார். சென்னை வந்திறங்கிய கையோடு முதல் வெளியாக தமிழில் டிவிட் செய்துள்ளார் பிரதமர் மோடி.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்.