*மேஷம் ராசியின்*
குருபெயர்ச்சி பலன்கள்
2019-2020
மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 11ஆம் (28.10.2019) தேதியின் பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் பிரதமை திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதாவது, செவ்வாய்க்கிழமை அதிகாலை 03.14 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 18ம் (04.11.2019) தேதியன்று பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் நவமி திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதாவது, செவ்வாய்க்கிழமை விடியற்காலை 05.17 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
குருவானவர் தனுசு ராசியில் தனது ஆட்சி வீட்டில் நின்று பல சுபச் செயல்களை இந்த வருடம் அளிக்கவுள்ளார்.
எதிலும் துணிச்சலுடன், இறங்கி போராடும் மேஷ ராசி அன்பர்களே !!
குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திலிருந்து ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சியாகும் குருபகவானால் பெயர், புகழ், செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய காலமாகும்.
இதுவரை உங்களுக்கு கிடைக்க இருந்த பாக்கியங்கள் அனைத்தும் தாமதப்பட்டோ அல்லது கிடைக்காமலேயோ இருந்திருக்கும். ஆனால், குருபெயர்ச்சிக்கு பின், இன்பங்கள் அனைத்தும் கைகூடும். இதற்குமேல் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்டப்போகிறது. பெண்களுக்கு புத்திர பாக்கியம் கைகூடும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சங்கடங்கள் விலகி நன்மைகள் பெருகும். தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி தந்தையின் அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். நீண்டகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆன்மிக சுற்றுலா செல்ல வாய்ப்புகள் அமையும். வாரிசுகள் வகையில் பெருமைப்படக்கூடிய விஷயங்கள் நடக்கப்போகிறது. குலதெய்வக் கோவில் திருப்பணிகளில் முன்னின்று நடத்தும் பொறுப்புகள் வந்து சேரும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். தன்னம்பிக்கையும், மனோதிடமும் அதிக அளவில் காணப்பெற்று மகிழ்வீர்கள். வெளிநாட்டில் வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்புகள் அமையும். வெளிநாட்டு வாய்ப்புகளால் பெருமை அடைவீர்கள். ஆன்மிகத்தில் உள்ளவர்கள் பெயரும், புகழும் அடைவார்கள்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
விரும்பிய இடங்களில் பணி இடமாற்றம் கிடைக்கும். இதுவரை மேல் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து தங்களின் திறமை வெளிப்படும். முயற்சிக்கேற்ற பதவி உயர்வு பெறுவீர்கள். உங்களின் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் பல விருதுகளை வென்றிடுவீர்கள். தகுதிக்கு ஏற்ற சன்மானம் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு :
இதுவரை தொழிலில் இருந்துவந்த முடக்கம் சரியாகி தொழிலில் மேன்மை உண்டாகும். பழைய வராக்கடன்கள் வசூலாகி தொழிலில் செல்வநிலை சிறப்படையும். வியாபாரம் சார்ந்த புதிய முயற்சிகள் அனைத்தும் கைகூடும். சக வியாபாரிகளிடம் இருந்த கசப்புகள் மாறி அவர்கள் தங்களை புரிந்து கொள்ளும் சூழல் ஏற்படும். பண முதலீடுகள் பலவகையிலும் பெருகி செல்வந்தராக திகழ்வீர்கள்.
மாணவர்களுக்கு :
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப பள்ளியில் முதன்மை நிலையை அடையும் வாய்ப்புகள் சிறப்பாக உள்ளது. அதனால் கவனம் செலுத்திப்படிக்க வேண்டியது அவசியம். படிப்பை முடித்து வேலைக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கைகூடும். கல்லூரி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் கல்வியில் நாட்டத்துடன் காணப்படுவீர்கள். விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு தங்களது துறையில் வெற்றி பெற வாய்ப்புகள் நிறைய உள்ளது.
பெண்களுக்கு :
விரும்பிய இடத்தில் திருமணம் அமையும். புத்திர பாக்கியம் கிட்டும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கள் திறமைக்கேற்ப பதவிகள் கைகூடும். தந்தை வழியில் ஏற்பட்ட சங்கடங்கள் மாறி சந்தோஷங்கள் பெருகும். குடும்பத்தில் பொருளாதார நிலை உயர்வடையும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் விஷயங்கள் நடைபெறும்.
விவசாயிகளுக்கு :
மஞ்சள் மற்றும் வருட பயிர்களை பயிரிடுவோருக்கு இந்த வருடத்தில் அமோகமான விளைச்சல் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த வில்லங்கங்கள் மாறி சுமூகமான தீர்வுகள் ஏற்படும். புதிய முயற்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் வெற்றியை தேடித்தரும். புதுவிதமான யுக்திகளை கையாண்டு விருதுகளை பெற முயற்சிகள் மேற்கொள்வீர்கள். நீர்வளம் சிறப்பாக அமையும். பணியாட்களின் ஆதரவு சிறப்பை கொடுக்கும். சொத்து விரிவாக்க முயற்சி கைகூடும்.
அரசியல்வாதிகளுக்கு :
இதுவரை மேலதிகாரிகளிடம் இருந்துவந்த மன சஞ்சலங்கள் நீங்கி தங்களின் மனதினை புரிந்து கொள்வார்கள். தலைமைப் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு இந்த காலம் வெற்றியை தரும். வயது மூத்தவர்களின் ஆதரவும், வழிகாட்டுதலும் பெரிய வகையில் கிடைக்கும். தங்களின் முயற்சிக்கு ஏற்றவாறு வெற்றிகள் உங்கள் கையில் வந்து சேரும். மனதில் நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உங்களின் திறமை வெளிப்பட தகுந்த காலம் இது.
கலைஞர்களுக்கு :
புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு புதிய சாதனைகளை படைப்பீர்கள்.பொருளாதார நிலை உயரும். வெளிநாட்டு நிகழ்ச்சிகள் மூலம் உயரிய விருதுகள் தங்களுக்கு காத்திருக்கின்றன. கலைகளில் எவரும் கண்டிராத புதிய நுட்பங்களை புகுத்தி வெற்றி வாகை சூட போகிறீர்கள். உங்கள் திறமை பளிச்சிடும் காலமிது.
வழிபாடு :
சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து விநாயகர் அகவல் பாடி வர மேற்கண்ட பலன்கள் அனைத்தும் கைகூடி நற்பலனை பெறுவீர்கள்.
*ரிஷபம் ராசியின்*

அன்புக்கு அடிபணியும் ரிஷபராசி அன்பர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 7ஆம் இடமான சப்தம ஸ்தானத்தில் இருந்து வந்த குருபகவான் தற்போது நடக்க இருக்கும் குரு பெயர்ச்சிக்கு பின் 8ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு செல்ல இருக்கின்றார். தங்கள் ராசிக்கு இப்போது நடந்து வரும் அஷ்டம சனியும், கேதுவும் மட்டுமல்லாமல் அஷ்டம குருவும் இணைந்து சில மாதங்களுக்கு செயல்படுகிறார்கள்.
இது வாழ்க்கையில் பலவிதமான புதிய அனுபவங்களையும், சில சோதனைகளையும் கடந்து வெற்றி வாகையை அளிக்கக்கூடிய காலங்களாக இருக்கக்கூடியதாகும். இந்த காலக்கட்டத்தில் உடன் இருப்பவர்கள் யார் யார் நலன் விரும்பிகளாக இருக்கின்றார்கள் என்பதை உணர்த்தக்கூடிய காலக்கட்டங்கள் ஆகும். எந்தவொரு செயலிலும் நிதானத்துடன் சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழல்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் சற்று அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நீண்ட காலமாக வீடு, மனை வாங்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு இந்த காலம் யோகம் அளிக்கும் காலமாக அமையும். மனதிற்கு பிடித்த வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். மனதினுள் தோன்றிய எண்ணங்களை மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்கு சில போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உண்டாகும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில இடமாற்றங்களால் புதிய அனுபவங்களையும், சில சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். உயரதிகாரிகளின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனுசரித்து செல்வது உத்தமம் ஆகும். சக ஊழியர்களிடம் தங்களது கருத்துக்களை கூறும்பொழுது சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். உங்களது திறமைகளுக்கான அங்கீகாரங்கள் காலதாமதமாக கிடைக்கும். கடந்தகால சில அனுபவங்கள் மூலம் புதுவிதமான பரிணாமத்தையும், உத்தியோகம் சார்ந்த புதிய தடத்தையும் உருவாக்கக்கூடிய காலமாகும். புதிய முயற்சிகளில் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு :
தொழிலில் ஏற்படும் பொருள் தேக்க நிலையினால் சில நெருக்கடியான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து அதனை நிறைவேற்றி வைப்பீர்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த குறைபாடுகள் நீங்கி மேன்மை உண்டாகும். பழைய வாகனங்களை மனதிற்கு பிடித்தவாறு சில மாற்றங்கள் செய்து பயன்படுத்தி மகிழ்வீர்கள். தொழில் சார்ந்த புதிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்வதற்கான சூழல்கள் ஏற்படும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான புதிய முயற்சிகளில் பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நன்மையை அளிக்கும். வேலையாட்களிடம் முரண்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதை காட்டிலும் அவர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்கினால் சில சங்கடங்களை தவிர்க்கலாம்.
மாணவர்களுக்கு :
கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும். படிப்பில் முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். பெற்றோர்களின் ஆலோசனைகளையும், அவர்களது அரவணைப்பும் சிறப்பான முறையில் முன்னேற்றத்தை கொடுக்கும். வாகனங்களை ஓட்டும்பொழுது சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். புதிய முயற்சிகள் தொடர்பான செயல்பாடுகளில் ஆசிரியர்களின் ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ள வேண்டும். பெற்றோர்களிடம் உரையாடும்பொழுது வார்த்தைகளில் கவனம் வேண்டும். விரும்பிய இடங்களில் எதிர்பார்த்த வேலைவாய்ப்புகள் சற்று காலதாமதமாக கிடைக்கும்.
பெண்களுக்கு :
தந்தைவழி உறவுகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்வது உங்கள் மீதான நம்பிக்கையையும், அன்பையும் அதிகப்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளுக்கு சுமூகமான முறையில் தீர்வுகளையும் அதை எதிர்கொள்ளும் மனப்பான்மையும் உண்டாகும். தாயின் ஆலோசனைகள் முன்னேற்றமான சூழலை உருவாக்கித் தரும். புதிய உடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் ஏற்படும். செய்யும் முயற்சிகளை துரிதப்படுத்துவதன் மூலம் புதிய வாய்ப்புகளும், முன்னேற்றமும் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். கணவருடைய பொருளாதார நிலைகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும்.
விவசாயிகளுக்கு :
பாசன வசதிகளால் மேன்மையான சூழல் ஏற்படும். பயிர்களுக்கு தகுந்த காலத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது விளைச்சலை அதிகப்படுத்தும். வருட பயிர்கள் தொடர்பான விளைச்சலை மேற்கொள்ளும்போது ஆலோசனைகளைப் பெற்று மேற்கொள்ளவும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் உயில் தொடர்பான விவகாரங்கள் குறைந்து சுமூகமான தீர்வு கிடைக்கும். பழைய பிரச்சனைகளால் சில சங்கடங்கள் நேரிடலாம். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சொத்துக்களை வாரிசுகளுக்கு பகிர்ந்து அளிப்பதற்கு சாதகமான காலமாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
சிந்தித்து செயல்படுவதன் மூலம் அனைத்து காரியங்களிலும் வெற்றி அடைவதற்கான சூழல்கள் ஏற்படும். கட்சி தொடர்பாக உயரதிகாரிகளிடம் கருத்துக்களை கூறும்போது கவனம் வேண்டும். செய்யாத சில செயல்களுக்காக சில அவப்பெயர்களும் தேவையற்ற வீண் வம்புகளும் அவ்வப்போது தோன்றி மறையும். வாக்குறுதிகளை அளிக்கும்பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படுவது மேன்மையைத் தரும். மற்றவர்களுக்கு ஜாமீன் மற்றும் கடன் சார்ந்த முயற்சிகளில் முன் நிற்கும்பொழுது சிந்தித்து செயல்பட வேண்டும். எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதத்தை உருவாக்கினாலும் பொறுமையுடன் செயல்பட்டால் நட்சத்திரங்களைப் போன்று மின்னுவதற்கான வாய்ப்பினை உருவாக்கித் தரும்.
கலைஞர்களுக்கு :
கலை தொடர்பான வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் சற்று காலதாமதமாக கிடைக்கும். தொலைநோக்கு பார்வையுடன் எடுத்த புதிய முயற்சிகள் யாவும் மெல்ல மெல்ல சாதகமாக அமையும். உங்களின் முயற்சிக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்வதற்கு தகுந்த காலக்கட்டமாகும். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல திறமைகள் மறைக்கப்படும் தவிர அவைகள் வீண் போவதில்லை.
வழிபாடு :
தேய்பிறையில் வரும் அஷ்டமி அன்று பைரவருக்கு மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வர சிறப்பான பலன்கள் உண்டாகும்.
*மிதுனம் ராசியின்*

எதையும் மிகச் சரியாக செய்து முடிக்கும் மிதுன ராசி நேயர்களே…!
இதுவரை உங்கள் ராசிக்கு 6ஆம் இடமான ருண ரோக ஸ்தானத்தில் இருந்துவந்த குருபகவான் இந்த குருப்பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு 7ஆம் இடமான சப்தம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார். இதுவரை மனதாலும், உடலாலும் பல இன்னல்களையும், ஏமாற்றங்களையும் சந்தித்த நீங்கள் இதற்குமேல் குருபகவானின் அருட்கடாட்சம் பார்வையை முழுமையாக பெற போகிறீர்கள்.
திட்டமிட்ட காரியத்தில் எண்ணிய வெற்றிகள் கிடைக்கும். புதிய குடும்ப உறுப்பினர்களின் வருகையால் குதூகலமான சூழல் உண்டாகும். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தங்களின் தன்னம்பிக்கை மேலோங்கும். உடல் தோற்ற பொலிவுகள் மேம்படும். சுயதொழில் முயற்சிகள் சிறப்பாக இருக்கும். பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். செயலில் வேகம் மட்டுமின்றி நிதானமும் வேண்டும். திருமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். தந்தையின் தொழில் முயற்சிகள் வெற்றியை தேடித்தரும். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொண்டு மகிழ்வீர்கள். காது தொடர்பான பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். வழக்கு தொடர்பான காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படவும். எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். தாயின் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
உத்தியோகத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். உங்கள் முயற்சியை துரிதப்படுத்துவதன் மூலம் பணியில் விரும்பிய மாற்றம் உண்டாகும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். சமூக சேவை தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபவர்களுக்கு இந்த காலம் ஒரு வசந்த காலமாகும்.
வியாபாரிகளுக்கு :
தங்கம் மற்றும் நவரத்தினம் சார்ந்த வியாபாரிகளுக்கு முன்னேற்றமான காலம் இது. சுயதொழிலில் சிறப்பான முறையில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழலும், லாபமும் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் உண்டாகும். பெரிய முதலீடுகள் சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு நன்மையை தரும். தொலைத்தொடர்பு சார்ந்த துறைகளில் லாபம் உண்டாகும்.
மாணவர்களுக்கு :
இதுவரை மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி கல்வியில் பல முன்னேற்றங்களை அடைவீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் பல திருப்புமுனைகள் உண்டாகும். படித்து முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு தங்களது துறையில் கெளரவம் மற்றும் பாராட்டுக்கள் கிடைப்பதற்கான சூழல் ஏற்படும்.
பெண்களுக்கு :
மனதில் நினைத்து பார்த்ததை விட மிகச் சிறப்பான திருமண வாழ்க்கை கைகூடும். இதுவரை கணவன்-மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இருவரும் இனி இரு உடல் ஓர் உயிர் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வீர்கள். சிறுதொழில் செய்து வரும் பெண்களுக்கு தங்களின் தொழிலில் எதிர்பாராத சில திருப்புமுனைகள் உண்டாகும். புத்திர பாக்கியத்தை எதிர்நோக்கும் பெண்களுக்கு புத்திர அபிவிருத்தி ஏற்படும்.
விவசாயிகளுக்கு :
மஞ்சள், வாழையை பயிரிடுபவர்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும். மஞ்சளின் விலை சற்று அதிகரித்து காணப்படும். சகோதரர்களிடையே இதுவரை இருந்துவந்த சொத்து பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். நீர்ப்பாசன நிலை தேவைக்கேற்ப காணப்படும். விளைச்சல் அதிகமாக இருக்கும். அண்டை, அயலார்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும். விவசாயம் சார்ந்த மற்ற துறைகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்குகொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
சமூகத்தொண்டு செய்பவர்களுக்கு இந்த காலம் உகந்தது. தாங்கள் செய்யும் அரசியல் செயலுக்கு ஏற்றவாறு தலைமை அதிகாரிகளிடம் நெருக்கமான சூழல் ஏற்படும். பொதுமக்களிடையே பிரபலம் அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கான சூழல் உண்டாகும். பெரிய மாநாடுகளில் கலந்துகொள்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சிகரமாக அமையும்.
கலைஞர்களுக்கு :
புதிய ஒப்பந்தங்கள் மூலம் மிகப்பெரிய மாற்றங்களை செயல்படுத்தி மகிழ்வீர்கள். இதுவரை பிறரின் ஒத்துழைப்புடன் பணியாற்றி வந்தவர்கள் இனிமேல் உங்களின் தனித்திறமையை நிரூபித்து வெற்றியடைவீர்கள். உங்களிடம் உள்ள மறைமுக திறமையை வெளிப்படுத்த சரியான காலம் இது. திறமைக்கேற்ற மதிப்பும், விருதும் தற்போது காத்திருக்கிறது. பொது தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்.
வழிபாடு :
வாரந்தோறும் சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு மாலையில் எள் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.
*கடகம் ராசியின்

மென்மையான மனமும், பாசமும் சிந்தித்து செயல்படும் உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!!
இதுவரை உங்கள் ராசியில் 5ஆம் இடமான பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து வந்த குருபகவான் இதற்குபின் உங்கள் ராசியில் 6ஆம் இடமான ருண ரோக ஸ்தானத்தில் பெயர்ச்சி அடைகிறார். இதுவரை இருந்துவந்த தடைகள் மற்றும் எதிர்ப்புகளை வெற்றி கொள்ளக்கூடிய பொன்னான காலம் ஆகும்.
ருண ரோக ஸ்தானத்தில் இருந்து குருதேவர் ஜீவன போக மற்றும் குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கின்றார். குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா பயணம் சென்று மகிழ்வீர்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமான நிலை சீராகும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான காலம் இது.
தவணை முறையில் பொருட்களை வாங்குவதன் மூலம் சொத்து சேர்க்கை அதிகரிக்கும். எதிர்காலத்தில் கூட்டுத்தொழில் செய்வதற்கான சூழல் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் சிறப்பாக இருக்கும். சரியான வேளைக்கு உணவு உட்கொள்வதன் மூலம் இடுப்பு மற்றும் தொடை ஆகிய உறுப்புகளில் உண்டாகும் வலிகளை தடுக்க இயலும். உடன்பிறப்புகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வசதி வாய்ப்புகள் மேம்படும். புத்திரர்களின் எதிர்காலம் சார்ந்த செயல்களை செய்து மகிழ்வீர்கள். சில இடமாற்றம் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்வது நன்மையளிக்கும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை முடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் முன்னேற்றத்தை கொடுக்கும். தொழிலில் புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
தாங்கள் இத்தனை நாட்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக தங்களுக்கு விரும்பிய இடத்தில் வேலைவாய்ப்புகள் அமையும். இதுவரை தற்காலிக பணியில் உள்ளவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தனவரவுகள் சிறப்பாக அமையும். தங்களது அலுவலக பணி தொடர்பாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியில் முன்னேற்றத்திற்கான புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி காண்பீர்கள். சக ஊழியர்களிடம் ரகசியங்களை பரிமாறும்போது சிந்தித்து செயல்படவும். மேலும் போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும்.
பெண்களுக்கு :
வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். வேலை தேடும் பெண்களுக்கு குருப்பெயர்ச்சிக்கு பின்னர் வேலை வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை ஏற்படும். புதுவிதமான இடமாற்றம் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். வரன் தேடுவோருக்கு சாதகமான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும். உறவுகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
மாணவர்களுக்கு :
தொழில் கல்வி பயில்வோருக்கு எதிர்பார்த்த இடத்தில் வேலைவாய்ப்புகள் அமையும். அடிப்படைக் கல்வி படிப்பவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையின் ஆதரவு மேலோங்கி காணப்படும். சட்டக்கல்வி பயில்வோருக்கு தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குருகுல கல்வி பயிலும் மாணவர்களுக்கு தங்களது கல்வியில் விருதுகள் வாங்கும் யோகம் ஏற்படும். தர்க்க மற்றும் வாதங்களில் பங்கு கொண்டு கீர்த்தி அடைவீர்கள். நிர்வாகம் தொடர்பான கல்வியில் புதுவிதமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பாராட்டப்படுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு :
கட்சி சார்ந்த மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சாதுர்யமான பேச்சுக்கள் மற்றும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு அதன்மூலம் லாபமடைவீர்கள். அரசியல் சார்ந்த விஷயங்களுக்காக வெளிநாட்டு பயணம் சென்று வருவீர்கள். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது முயற்சியை துரிதப்படுத்தும். அதனால் பல சந்தர்ப்பங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளலாம். தலைமை அதிகாரிகளிடம் நெருக்கமான சூழல் உண்டாகும்.
விவசாயிகளுக்கு :
எதிர்பார்த்த விளைச்சல் மூலம் மனமகிழ்ச்சி அடைவீர்கள். ரசாயன உரங்களை உபயோகிப்பதன் மூலம் சிறப்பான வளர்ச்சியை காண்பீர்கள். பூமிக்கடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகளால் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். விளைச்சலுக்கு தேவையான பாசன வசதிகள் உங்களுக்கு கைக்கொடுக்கும்.
வியாபாரிகளுக்கு :
இதுவரை தொழிலில் இருந்துவந்த முடக்கம் நீங்கி அபிவிருத்தி உண்டாகும். ரசாயனம் போன்ற தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு முன்னேற்றமான காலமாகும். வெளியூர் பயணங்கள் மூலம் தொழிலில் பலவிதமான முன்னேற்றங்களை அடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலில் உள்ளவர்கள் முதலீடு சார்ந்த கோப்புகளில் கவனத்துடன் கையாள வேண்டும். பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு சிறப்பான வளர்ச்சியை கொடுக்கும் காலம் இது. தொழில் முன்னேற்றத்திற்காக வங்கி கடன் வாங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி உகந்த காலமாக அமையும்.
கலைஞர்களுக்கு :
வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று தங்களது திறமைக்கேற்ற வெற்றி பெறுவீர்கள். பிரபலமான மனிதர்கள் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த பழைய வழக்குகள் சில சங்கடங்களை கொடுக்க நேரிடும். நண்பர்களுடன் சேர்ந்து புதுவிதமான இடத்திற்கு பயணம் மேற்கொள்வீர்கள்.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் இராகவேந்திரர் மற்றும் குருமார்களை தரிசனம் செய்துவர ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
*சிம்மம் ராசியின்*

சவால்களை வென்று சாதனை படைக்கும் சிம்ம ராசி அன்பர்களே ..!
இதுவரை சுகஸ்தானமான நான்காம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் இனி ஐந்தாம் இடமான பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து தங்களுக்கு அனைத்துவிதமான மகிழ்ச்சிகளை தரவிருக்கிறார்.
இயற்கை சுபரான குருதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து பாக்கிய, லாப மற்றும் ஜென்ம ஸ்தானத்தையும் பார்க்கின்றார். மனதில் நினைத்த மற்றும் செய்ய துவங்கிய அனைத்து காரியத்திலும் வெற்றி பெறுவீர்கள். வீடு, மனை வாங்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு தகுந்த காலமாக இருக்கும். அரசு சார்ந்த நிர்வாகப் பொறுப்புகள் உங்களை வந்துச் சேரும். பெரியோர்கள் மற்றும் மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
பாக்கிய ஸ்தானத்திற்கு குருபகவான் அருட்பார்வை கிடைப்பதால் உன்னத புண்ணிய காரியங்களை செய்து மகிழ்வீர்கள். தொழிலில் ஈட்டப்படும் தொகையை சேமிப்பதன் மூலம் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் மேன்மையடையும். மூத்த சகோதர, சகோதரிகளின் அன்பும், ஆதரவும் கைகூடும். வாரிசுகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆன்மிகம் சார்ந்த வெளிநாடு சுற்றுலா சென்று வருவீர்கள். சமூக சேவையில் உள்ளவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி ஒரு பொன்னான காலமாக அமையும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
நீண்ட நாட்களாக இருந்துவந்த கடன்களை முடித்துவிட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவு தங்கள் பணியில் ஒரு சிறப்பான இடத்திற்கு கொண்டு செல்லும். தந்தையின் தொழிலுக்கு நீங்கள் உறுதுணையாக இருப்பீர்கள். உத்தியோகம் சார்ந்து வெளியூர் பயணம் சென்று வர வேண்டுமென்று மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் கைகூடும். உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். புதுவிதமான அனுபவங்களால் செல்வாக்கு மேம்படும். உத்தியோகம் தொடர்பான அடுத்த இலக்கை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.
வியாபாரிகளுக்கு :
சுயதொழில் செய்பவர்கள் தங்களது தொழிலில் சிறப்பான வளர்ச்சியை அடைவீர்கள். வெளியூரில் தொழிலை செய்வதற்கான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்து வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். வேலையாட்கள் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்த துறைகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சிந்தனைகளுக்கு செயல் வடிவம் அளித்து மகிழ்வீர்கள்.
மாணவர்களுக்கு :
அடிப்படை கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் நாட்டத்தை அதிகரிப்பதன் மூலம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கான சூழல் உண்டாகும். கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு படிப்பை முடித்தவுடன் வேலைவாய்ப்புகள் அமையும். ஆராய்ச்சிகளில் பணியாற்றுபவர்களுக்கு தங்களது கல்வி சார்ந்து ஏதேனும் புதிதாக கண்டுபிடிப்பீர்கள். குருகுலத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது குருவின் ஆசியை நிச்சயம் பெறுவீர்கள். கல்வி முன்னேற்றத்திற்காக தந்தையின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.
பெண்களுக்கு :
திருமணம் முடிந்து பெண்களுக்கு விரைவில் புத்திரப்பாக்கியம் கிட்டும். தந்தை வழியில் ஆதரவுகள் மேலோங்கி காணப்படும். தாயின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். சிறு, குறு தொழில் செய்யும் பெண்கள் தங்களது பணியில் சற்று முயற்சியை உறுதிப்படுத்துவதன் மூலம் சிறப்பான பலன்களை அடைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கும். உத்தியோகம், வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும்.
விவசாயிகளுக்கு :
உழவு தொழில் செய்பவர்களுக்கு தங்களது தொழிலில் அமோகமான விளைச்சலை காண்பீர்கள். வாழையின் விலை சற்று அதிகரித்து காணப்படும். துவரையின் விளைச்சல் நிலை சிறப்பாக அமையும். பூமிக்கு அடியில் விளையும் பயிர்கள் நன்கு செழிப்பாக விளையும். பாசன வசதிகள் மேம்படும். மனை தொடர்பான கடன் பிரச்சனைகள் குறைவதற்கான உதவிகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
கட்சி சார்ந்த மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசியல் சார்ந்த நண்பர்களுடன் வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். பேச்சில் பொறுமை அவசியம். செய்யும் முயற்சிக்கு ஏற்ப பல வெற்றிகளை அடைவீர்கள். தொண்டர்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சில செயல்பாடுகளில் போராட்டங்களுக்கு பின்பே வெற்றி கிடைக்கும்.
கலைஞர்களுக்கு :
தங்களது கலைத்துறையில் விதவிதமான முத்திரைகளை பதிக்கப் போகிறீர்கள். தொழில் சார்ந்த விஷயங்களில் வெளியூர் மற்றும் வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். மனதை எப்போதும் மகிழ்ச்சி நிலையில் வைப்பதன் மூலம் பலவிதமான முன்னேற்றங்களை அடைவீர்கள். தங்களது தனித்தன்மை மேலோங்கி காணப்படும். இசை கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் குரு தட்சிணாமூர்த்தியை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நெய்வேத்தியம் ஆன பொட்டுக்கடலை வைத்து பிரார்த்தனை செய்து வர குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் உண்டாகும்.
*கன்னி ராசியின்*

கவனம் எதில் இருப்பினும், தன் கடமை தவறாத கன்னி ராசி நேயர்களே !!
இதுவரை தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் இருந்த குருதேவர் வருகின்ற குருப்பெயர்ச்சியில் நான்காம் இடமான சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களின் ஆதரவால் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள்.
இயற்கை சுபரான குருதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து அஷ்டம ஜீவன மற்றும் அயன சயன ஸ்தானத்தையும் பார்க்கின்றார். கடன் சார்ந்த பிரச்சனைகளால் ஏற்பட்ட மனவருத்தம் அகலும். பயனற்ற அலைச்சல்களால் சில நேரங்களில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பழைய வாகனங்களை மாற்றிவிட்டு புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான காலம் இது.
நண்பர்களுடன் வெளியூர் பயணம் மேற்கொண்டு மனம் மகிழ்வீர்கள். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த எண்ணங்களும், செயல்பாடுகளும் மேம்படும். எதிர்பாராத சில இடமாற்றம் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கால்நடைகள் வளர்ப்பின் மூலம் லாபம் மேம்படும். விலகி நின்றவர்கள் உங்களை நாடி வருவதற்கான சூழல் உண்டாகும். பெற்றோர்கள் பற்றிய கவலைகள் குறையும். குடும்பத்தில் சுபகாரியம் செய்து மனம் மகிழ்வீர்கள்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். மாமன், மைத்துனரின் ஒத்துழைப்பு உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழலை உருவாக்கும். தற்காலிக பணியில் உள்ளவர்களுக்கு வேலை நிரந்தரம் செய்யப்படும். விரயங்கள் குறைந்து லாபம் பெருகும். உத்தியோகத்தில் சம வயதினரால் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு :
வெளிநாட்டு பயணம் மூலம் அரசியலில் வெற்றி காண்பீர்கள். இதுவரை இருந்துவந்த சங்கடங்கள் மற்றும் அவப்பெயர்கள் யாவும் அகலும். மேடைப் பேச்சுக்கள் மூலம் உங்கள் புகழ் மேலோங்கும். மனதில் சமய சிந்தனை மேம்படும். அரசியல் சார்ந்த முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதலும் அதனால் மனதில் புதுவிதமான நம்பிக்கையும் உண்டாகும். சிறுதூர பயணம் மற்றும் தகவல் தொடர்பு துறைகளால் சாதகமான பலன்கள் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
நாடகக் கலையை தொழிலாக மேற்கொண்டவர்களுக்கு வருகின்ற குருப்பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். தூரதேச பயணம் மூலம் பல சவால்களை வென்று காட்டுவீர்கள். மூத்த சகோதரர்களின் ஆதரவு தங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும். எதிர்வாதங்களில் ஈடுபடுவதன் மூலம் பெரும் புகழ் பெறுவீர்கள். கலை சார்ந்த துறையில் இருந்துவந்த மனக்கவலைகள் அனைத்தும் குறைந்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
விவசாயிகளுக்கு :
புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு விவசாயத்துறையில் புதுவிதமான மாற்றத்தை செய்வீர்கள். மின் காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். கிழங்கு வகைகளின் விளைச்சல் அமோகமாக இருக்கும். நீர்ப்பாசன வசதிகள் மூலம் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் புத்திரர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நிலம் மீதான வங்கி கடன் குறைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
பெண்களுக்கு :
தாயிடம் இருந்துவந்த சிறு சிறு மனசங்கடங்கள் நீங்கி தாயிடம் அன்பு அதிகரிக்கும். விவாகம் தள்ளிப்போகும் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கணவன், மனைவியிடையே அன்பு பொங்கி மகிழ்ச்சிகரமாக வாழ்வீர்கள். உற்றார், உறவினர்களின் ஆதரவு கைகொடுக்கும். தங்களது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்வதற்கான சூழல்கள் உண்டாகும். தொழில் சார்ந்த ரகசியங்களை பகிரும்போது சிந்தித்து செயல்படுவதினால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
மாணவர்களுக்கு :
அடிப்படை கல்வி கற்கும் மாணவர்கள் தங்களது கல்வியில் சிறிது முயற்சியை துரிதப்படுத்துவது அவசியம். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் கல்வியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு படிப்பு முடிந்தவுடன் சிறந்த இடத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். படிப்பு மற்றும் ஆராய்ச்சி சம்பந்தமான விஷயங்களுக்காக வெளியூர் சென்று வருவீர்கள். நண்பர்களுடன் வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது சற்று கவனத்துடன் செயல்படவும்.
வியாபாரிகளுக்கு :
சுயதொழில் செய்பவர்கள் தங்களது தொழிலில் புதுவிதமான மாற்றங்களை செய்து வெற்றி காண்பீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். புதிய விற்பனையாளர்கள் அறிமுகமாவார்கள். தொழிலில் இதுவரை இருந்துவந்த முடக்க நிலை மாறி முன்னேற்றம் அடைவீர்கள். வெளிநாட்டு பயணங்களால் அலைச்சல் இருந்தபோதிலும் லாபம் கைகூடும். அரசாங்கத்தின் உதவி பலமாக அமையும். சிற்பம், சித்திரம், கலைக்கூடம் போன்ற தொழிலில் உள்ளவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் ஏற்படும் மற்றும் அதில் சாதனைகளும் செய்வீர்கள்.
வழிபாடு :
மாதம்தோறும் வரும் ஏகாதசியில் விரதம் இருந்து துளசியினால் விஷ்ணுவின் அவதாரமான நரசிம்ம மூர்த்தியை வழிபட்டு வர சகல நன்மைகளையும் பெறுவீர்கள்.
துலாம் ராசி
குருபெயர்ச்சி பலன்கள் 2019-2020

துலாக்கோல் போல் எதையும் சீர்தூக்கி எடை போடும் தூய்மையான இதயம் கொண்ட துலா ராசி நேயர்களே !
இதுவரை தன, வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் இதற்குமேல் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு இடம் பெயர்கின்றார். தங்களின் முயற்சிக்கு ஏற்ப பல முன்னேற்றங்களை காண்பீர்கள். பணியில் நேர்மையை கடைபிடிப்பதன் பலனாக புகழின் உச்சத்தை அடைவீர்கள்.
இயற்கை சுபரான குருதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து சப்தம பாக்ய மற்றும் லாப ஸ்தானத்தையும் பார்க்கின்றார். இளைய சகோதரர்களின் உதவிக்கரம் உங்களை அரவணைக்கும். காது சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். திருமணம் சம்பந்தமான செயல்பாடுகளை தீவிரப்படுத்துவதன் மூலம் திருமண யோகம் கைகூடும். தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சந்தோஷமான குடும்ப சூழல் அமையும்.
நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். ஆலய திருப்பணியை முன்னின்று செயல்படுத்தும் வாய்ப்புகள் அமையும். புனித யாத்திரை சென்று வருவீர்கள். பெரியோர்கள் மற்றும் மகான்களின் தரிசனமும், ஆசியும் கிடைக்கப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பணி அமர்வு ஏற்படும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
பணியிட பயிற்சியுடன் கூடிய பணி உயர்வு ஏற்படும். புதிய செயல்திட்டங்களை உருவாக்கி சாதித்து காட்டுவதற்கு உரிய சூழல் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும். பணி நிறைவு பெற்றவர்களுக்கு கௌரவ பதவிகள் தேடி வரும். சிலருக்கு தலைமைப் பதவி ஏற்று ஆலயப் பணிகள் மற்றும் தர்ம ஸ்தாபனங்களை நிர்வாகம் செய்வதற்கான சூழல் உண்டாகும். மேலதிகாரிகளிடம் நற்பெயர் உண்டாகும். மக்கள் தொடர்பு பணியில் உள்ளவர்களுக்கு மக்களிடையே நன்மதிப்பும், புகழும் உண்டாகும்.
பெண்களுக்கு :
சிறு மற்றும் குறு தொழில் செய்யும் பெண்களுக்கு தொழிலில் இருந்துவந்த தடைகளை தகர்த்து முன்னேற்றம் காண்பீர்கள். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த மனக்கவலைகள் தீர்ந்து சுபிட்சம் உண்டாகும். மூத்த சகோதரர் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். மனதிற்கு விரும்பிய ஆடை, ஆபரண சேர்க்கை சிறப்பாக இருக்கும். உத்தியோகம் சார்ந்த சிறுதூர பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவுகள் மனதிற்கு புது நம்பிக்கையை அளிக்கும்.
மாணவர்களுக்கு :
போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடுவீர்கள். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கைகூடும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு முதன்மை மதிப்பெண்கள் பெறும் சூழல் உண்டாகும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படுவதன் மூலம் பரிசுகளும், பாராட்டுகளும் தேடிவரும். அயல்நாடுகளில் சென்று மேற்கல்வி பயில்வதற்கு முயற்சி செய்வோர்க்கு அனுகூலமான காலமாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்பட்டு தலைமையிடத்தில் நற்பெயர் உண்டாகும். பொதுக்கூட்டங்களில் உங்களின் பேச்சாற்றல் மூலம் மக்களின் மனதை கவர்வீர்கள். பொது தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை நடத்துபவர்கள் நற்பெயரும், புகழும் அடைவார்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மூலம் தெளிவான சிந்தனைகள் உண்டாகும். தங்களின் அரசியல் பணிக்கு குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு நிறைவாக அமையும். புது விதமான யுத்திகளால் பல தடைகளை வெற்றி கொள்வீர்கள்.
விவசாயிகளுக்கு :
கடுகு உளுந்து போன்ற தானியப் பயிர்களை பயிரிட்ட விவசாயிகளுக்கு விளைச்சல் மற்றும் லாப நிலை சிறப்பாக இருக்கும். நீர்ப்பாசன நிலை தேவைக்கேற்ப கை கொடுக்கும். வரப்பில் உள்ள நடைப்பாதை பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். மஞ்சள், கரும்பு, வாழை போன்ற பயிர்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எண்ணெய் வித்துக்களில் முதலீடு செய்வதன் மூலம் பொருளாதார லாபம் பெறுவீர்கள். உங்கள் சிந்தனைகளை புதிய முயற்சிகளில் ஈடுபடுத்துவதன் மூலம் பல சிறப்புகளை அடைவீர்கள்.
கலைஞர்களுக்கு :
அயல்நாட்டு பயணங்கள் மூலம் பல சிறப்பான சூழல் உண்டாகும். கலைகள் சார்ந்த அறிவு மேலோங்கும். உங்களின் போட்டியாளர்களை வெற்றி கொண்டு சாதனை படைப்பீர்கள். பொருளாதார நிலை உயரும். கதை எழுதுபவர்களுக்கு தங்களின் படைப்புகளுக்கான விருதும், அங்கீகாரமும் கிடைக்கும். மலை நாட்டு இடங்களுக்கு சென்று வருவதினால் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரத்தில் புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். ஜவுளி, வர்த்தகம் செய்யும் வியாபாரிகள் தொழிலில் வெற்றிக்கொடி நாட்டுவார்கள். சர்வதேச வணிகம் மற்றும் ஏற்றுமதி தொழிலில் விருப்பம் உண்டாகும். இதற்கு முன்னர் ஏற்றுமதி தொழிலில் உள்ளவர்கள் சிறப்பான நிலையை எட்டுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இல்லாமல் தொழிலை தொடரும் சூழல் உண்டாகும். சிலருக்கு தந்தையின் தொழிலையும் ஏற்று நடத்தும் வாய்ப்புகள் அமையும். வங்கி கடனுதவி குறித்த நேரத்தில் கைக்கு வந்து சேரும்.
வழிபாடு :
திங்கட்கிழமைதோறும் சிவபெருமானுக்கு வில்வ இலைகள் வைத்து ஆராதனை செய்வதன் மூலம் மனதில் தன்னம்பிக்கையும், மகிழ்ச்சிகரமான உணர்வு உண்டாகும்.
*விருச்சகம் ராசியின்*

வீண் பேச்சுக்கு முக்கியத்துவம் தராத விருச்சிக ராசி நேயர்களே!!
இதுவரை உங்களின் ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் தற்போது பெயர்ச்சியாகி குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெறுகிறார். புதிய நபர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
இயற்கை சுபரான குருதேவர் தான் நின்ற இடத்திலிருந்து ருண ரோக அஷ்டம மற்றும் ஜீவன ஸ்தானத்தையும் பார்க்கின்றார். இதனால் வாடிக்கையாளர்கள் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். ஆன்மீக பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். இதுவரை இருந்துவந்த கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மனதிற்கு இதமான சூழல் உருவாகும்.
உயரதிகாரிகளின் மேலான ஆலோசனையால் மேன்மையான வாய்ப்புகள் தேடி வரும். தலைவலி, தலைப்பாரம் போன்ற உபாதைகள் நீங்கி உடல்நலம் மேன்மையடையும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
பட்டதாரிகளுக்கும், வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் அரசு பணியில் வேலை அமையும். மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தேடி வரும். சுரங்கம் தொடர்பான பணியில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரமாகும். பணி சார்ந்த தேர்வுகள் எழுதியவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் பணி தொடர்பான ரகசியங்களை காப்பது அவசியம். பாதுகாப்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்தும் ஆற்றல் மேலோங்கும்.
பெண்களுக்கு :
தம்பதியினரிடையே இருந்துவந்த பொருளாதார சிக்கல்கள் தீரும். இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். சொத்து சார்ந்த வழக்குகளில் சாதகமாக முடிவுகள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். எதிர்காலம் குறித்த நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மாணவர்களுக்கு :
அடிப்படைக்கல்வி பயிலும் மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள். உயர்கல்வி பயில்பவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது அவசியமாகும். கல்லூரி கல்வி பயில்பவர்கள் பட்டம் பெற்று வெற்றி வாகை சூடுவார்கள். பட்டம் பெற்ற கையோடு வேலைவாய்ப்பு தேடி வரும். விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் சாதகமாக அமையும். சிலம்பாட்டம், வில்வித்தை, கராத்தே போன்ற உடல் வலிமையை நிலைநாட்டும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் வீரத்தை வெளிப்படுத்துவார்கள்.
அரசியல்வாதிகளுக்கு :
கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும். பதவிகள் உங்களைத் தேடி வந்து அலங்கரிக்க போகின்றது. நீண்டகால கனவுகள் பலிதமாகும். பாதியில் நின்றுபோன வீடு, மனை சார்ந்த வேலைகள் மீண்டும் தொடர்ந்து, நிறைவு செய்வீர்கள். தலைமையிடமிருந்து வந்த கசப்புகள் மாறி சுமூகமான சூழல் உருவாகும். சுற்று பயணத்தின் மூலம் வெற்றி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வீர்கள். வழக்குகளில் சமாதானமான போக்கை கையாளுவதே உத்தமம்.
விவசாயிகளுக்கு ;
மலைப்பகுதியில் காப்பிக்கொட்டை விளைச்சல் அதிகரிக்கும். புதுவகை கண்டுபிடிப்புகளால் மேன்மையான லாபத்தைப் பெறுவீர்கள். மூலிகைப்பயிரை பயிரிடுவதன் மூலம் சிறப்பான விளைச்சலை எதிர்பார்க்கலாம். நெல், பருத்தி மற்றும் வெண்மை நிற பொருட்கள் மூலம் அபரிமிதமான லாபத்தை ஈட்டுவீர்கள். மஞ்சள் கிழங்குகளில் முதலீடு செய்வது நற்பலனை தரும்.
கலைஞர்களுக்கு :
பிரபலமான நபர்களின் ஆதரவினால் புகழின் உச்சத்தை அடையவீர்கள். எண்ணிய கனவுகள் கைகூடும் காலம் இது. முயற்சிகேற்ற முன்னேற்றம் உண்டாகும். தன்னம்பிக்கையும், மன உறுதியும் மேம்படும். இதுவரை காப்பாற்றி வைத்திருந்த நாணயத்திற்கு தக்க சன்மானம் கிடைக்கும் காலமிது. சிறு தூர பயணங்களில் ஈடுபடுவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். இசைப்பயிற்சி பள்ளி நடத்துபவர்களுக்கு மக்களிடையே நல்ல ஆர்வம் ஏற்பட்டு மாணவர் சேர்க்கை சிறப்பாக இருக்கும். கலைக்கான அங்கீகாரம் கிடைக்க பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு :
ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு வியாபார அபிவிருத்தி ஏற்படும். மருத்துவத்துறை சார்ந்த வியாபாரம் செய்பவர்களுக்கு அரசாங்கத்தின் உதவிக்கரம் உறுதுணையாக இருக்கும். தங்கநகை வியாபாரிகளுக்கு முதலீட்டிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று லாபத்துடன் கூடிய மனமகிழ்ச்சி பெறுவீர்கள்.
வழிபாடு
செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை தரிசித்து வருவதன் மூலம் மனதில் நினைத்த காரியங்கள் நினைத்தப்படியே நிறைவேறும்.
*தனுசு ராசியின்*

உதவி என்று வருவோருக்கு தயக்கமின்றி தன்னால் ஆன உதவிகளை செய்திடும் தனுசு ராசி அன்பர்களே!!.
இதுவரை உங்களின் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் இனி உங்கள் ராசியிலேயே ஆட்சி பெறுகிறார். ஏழரை சனியின் கடுமையான பாதிப்புகள் குறையும். குழப்பமான நிலையில் இருந்து தெளிந்து, நிலையாக நின்று வெற்றிக்கொடியை நிலைநாட்ட போகிறார்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
இயற்கை சுபரான குருதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து பூர்வீக களத்திர மற்றும் பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கின்றார். புத்திக்கூர்மை வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர்கல்வி சார்ந்த முடிவுகளில் பெரியார்களின் வழிகாட்டுதல் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும். வெளியூர் பயணம் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். குடும்பத்தில் புதியவர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.
குருவின் ஏழாம் பார்வை ஏழாம் பாவத்தை பார்ப்பதால் நண்பர்கள் மற்றும் கூட்டுத்தொழிலில் இருந்துவந்த சங்கடங்கள் மாறும். பகையான நண்பர்கள் விரும்பி வந்து இணைவார்கள். கணவன், மனைவி ஒற்றுமை மகிழ்ச்சிகரமாக அமையும். வர்த்தக தொடர்பான பணிகளில் ஆதாயமான சூழல் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
செய்யும் செயல்களால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். பொதுநலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த தேடல் பிறக்கும். சபைகளில் அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் கௌரவ பதவிகளால் செல்வாக்கு மேம்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
பணிபுரியும் இடத்தில் பெரும் செல்வாக்கும் மேம்படும். உத்தியோகத்தில் உயர் பதவிக்காக முயற்சி செய்பவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சிக்கு பின்னர் நல்ல இடத்தில் வேலைவாய்ப்பு அமையும். அலுவலக பணிகளில் உங்களின் திறமைகள் பளிச்சிடும் காலமாகும். மேலதிகாரிகளிடம் பாராட்டும், நன்மதிப்பு பெறுவீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகம் தொடர்பான பயிற்சிக்காக வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று மகிழ்வீர்கள். வேலைகள் தொடர்பான புது முயற்சிகள் கைக்கூடும்.
விவசாயிகளுக்கு :
நீர் பாசனத்தின் நிலை தேவைக்கேற்ப சிறப்பாக அமையும். வயல்களில் புதிய நுட்ப கருவிகள் மூலம் அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள். மனை சார்ந்த கடன்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீகத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்சனைகள் விலகி சுமூகமான சூழல் ஏற்படும். மகன் மற்றும் மகளின் திருமண ஏற்பாடுகள் கைகூடும். பிரபலமானவர்களின் நட்புகள் மாற்றமான சூழலை உருவாக்கும்
பெண்களுக்கு :
இதுவரை திருமணம் கைகூடாத பெண்களுக்கு குருப்பெயர்ச்சிக்கு பின்னர் நல்ல இடத்தில் விவாகம் அமையும். திருத்தல சுற்றுலா சென்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தங்களின் திறமைக்கு ஏற்ற பதவி உயர்வு கைகூடும். தந்தை வழி உறவினர்கள் மூலம் ஏற்பட்ட சிறு சிறு சஞ்சலங்கள் மாறி சந்தோஷம் உண்டாகும். நீண்ட காலமாக எதிர்பார்த்த வீடு, மனை வாங்கும் யோகம் நிறைவேறும். எதிர்பாராத சில மாற்றம் மூலம் வாழ்க்கையில் புதிய அனுபவம் உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.
மாணவர்களுக்கு :
அடிப்படை மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காண்பார்கள். போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடுவார்கள். பெரியோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெற்று ஆசி பெறுவீர்கள். விரும்பிய இடங்களில் உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள் அமையும். ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு புதிய கண்டுபிடிப்பினால் சாதனை பெறுவார்கள். எதிர்பார்த்து கொண்டிருந்த வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும்.
அரசியல்வாதிகளுக்கு :
தலைமை அதிகாரிகளிடம் நெருக்கமான சூழல் ஏற்படும். தொண்டர்கள் மத்தியில் உங்களின் செல்வாக்கு மேம்படும். புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு பல சாதனைகளை படைக்கப் போகிறீர்கள். ராஜ பிரதிநிதிகள் உதவிக்கரம் நீட்டுவார்கள். சாதுர்யமாக செயல்பட்டு பல இன்னல்களை வெற்றி கொள்ள போகிறீர்கள். வஞ்சக எண்ணத்துடன் நட்பு கொண்டவர்களின் நிஜ முகம் உங்களுக்கு தெரியப்போகிறது.
கலைஞர்களுக்கு :
புதுவிதமான செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகள் மேம்படும். கலை சமூகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பான பலனை கொடுக்கும். பரதம் மற்றும் இசை போன்ற கலையை தொழிலாக கொண்டவர்கள் மேடையில் தங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான சூழல் ஏற்படும். சாஸ்திரத்தின் அறிவு சிறப்பாக இருக்கும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு மேலோங்கும். பொறுமையாக இருந்து முயற்சியை துரிதப்படுத்துவதனால் பல வெற்றிகள் கிடைக்கப் போகிறது
வியாபாரிகளுக்கு :
தந்தையின் தொழிலை தன் தொழிலாக மேற்கொண்டவர்களுக்கு சிறப்பான வளர்ச்சி கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்களது தொழிலில் புதிய யுக்தியை கையாளுவதன் மூலம் அமோகமான வெற்றி அடைவீர்கள். உங்களது தொழிலுக்கு வாழ்க்கை துணை பெரும் உதவி செய்வார்கள். தொழில் சார்ந்த பெரிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு செய்யவும். மென்பொருள் சார்ந்த வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும்.
வழிபாடு
வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் வரும் பிரதோஷம் அன்று சிவபெருமானை வழிபட்டு சுண்டலை நைவேத்தியமாக வைத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடுப்பதன் மூலம் நன்மை உண்டாகும்.
மகரம் ராசியின்*

மன உறுதி அதிகம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!!
இதுவரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் பெயர்ச்சியாகி அயன, சயன போக ஸ்தானத்தில் ஆட்சி பெற இருக்கிறார்.
இயற்கை சுபரான குருதேவர் தான் நின்ற இடத்திலிருந்து சுக ருண ரோக மற்றும் அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கின்றார். குடும்ப உறுப்பினர்கள் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். பயணங்கள் மூலம் எண்ணிய காரியங்கள் ஈடேறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனை வாங்குவதற்கான யோகம் உருவாகும். தாயின் உடல்நலம் மேன்மையடையும்.
எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்த்த எண்ணம் நிறைவேறும். தொழிலில் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
மாமன் வர்க்கத்தினர் தங்களது தொழிலுக்கு ஏதேனும் சிறிதளவு உதவி செய்வார்கள். சிறுதொழில் செய்பவர்களுக்கு உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி மேற்கொண்டால் வேலைவாய்ப்பு உருவாகும். தற்காலிக பணியில் உள்ளவர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.
பெண்களுக்கு :
தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் வேலை தேடினால் அரசு பணிக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வங்கியில் கடனுதவி பெறுவதன் மூலம் சிறுதொழிலை சீர் செய்யலாம். மேற்கல்வி படிக்க விரும்புவோரின் எண்ணம் ஈடேறும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலை நிரந்தரமாகும்.
கலைஞர்களுக்கு :
வெளியூர் சென்று நமது கலாச்சாரங்களை ஓவியமாக வரைந்து தங்களது திறமைகளை நிரூபிக்கும் காலம் இது. கலைஞர்கள் தங்களது படைப்புகளில் புதுவிதமான கண்ணோட்டத்தை பயன்படுத்தி பரிசு மற்றும் பாராட்டு பெறுவீர்கள். எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகள் மேம்படும். கலை சார்ந்த போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெறுவீர்கள்.
விவசாயிகளுக்கு :
நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த மனை அல்லது விவசாய பூமி வாங்கும் யோகம் கிடைக்கும். நெல் பயிரிட்டு உள்ளவர்களுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். கால்நடைகளின் மூலம் லாபம் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். மண் சார்ந்த பொருட்கள் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மாணவர்களுக்கு :
அடிப்படைக்கல்வி மேற்கொள்ளும் மாணவர்கள் படிப்பில் சிறிது கவனம் செலுத்துவதன் மூலம் நல்ல மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது. வில்வித்தை போன்ற போட்டிகளில் கலந்து கொண்டால் வெற்றி கிடைக்கும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் கல்வியில் முதல் மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது.
வியாபாரிகளுக்கு :
வாகனங்களை பழுது பார்க்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான காலம் இது. ரசாயனம் தொடர்பான தொழில்களில் ஈடுபடுபவர்கள் புதிய முயற்சியை மேற்கொள்வீர்கள். வங்கிக்கடன் பெறுவதன் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்து கொள்ளலாம். தாய்வழி சார்ந்த சொத்துக்கள் தொழிலுக்கு உதவியாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
கட்சி சார்ந்த மேலதிகாரிகளின் அறிமுகம் புதுவிதமான மாற்றத்தை உருவாக்கும். உரையாடும்போது பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனம் வேண்டும். பிரச்சாரத்திற்காக வெளியூர் செல்ல நேரிட்டால் உணவில் கவனம் செலுத்த வேண்டும். கருத்துக்களை வெளியிடும்போது சிந்தித்து செயல்பட வேண்டும்.
வழிபாடு :
திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசனம் செய்து வர எண்ணிய காரியங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்
*கும்பம் ராசியின்*

குணம் மிகுந்த கும்ப ராசி அன்பர்களே..!!
இதுவரை ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் இதற்கு பிறகு லாப ஸ்தானம் பதினொன்றாம் இடத்தில் இருந்து பலவிதமான நன்மைகளை புரிய இருக்கின்றார். எதிர்பார்த்த ஆதரவுகள் கிடைக்கும். மறைந்து இருந்த திறமைகளை வெளிப்படுத்தி லாபகரமான வாய்ப்புகளை பெறுவீர்கள்.
இயற்கை சுபரான குருதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து தைரிய பஞ்சம மற்றும் சப்தம ஸ்தானத்தையும் பார்க்கின்றார். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். வீர, தீர சாகசங்கள் மூலம் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.
திருமண தொடர்பான முயற்சிகள் கைகூடும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகள் இடையே இருந்துவந்த மனகசப்புகள் நீங்கும். சேமிப்புகள் உயரும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான தகவல்கள் அனுகூலமாக இருக்கும். புதிய ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
பணியில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சக பணியாளர்களின் நட்புறவு சிறப்பாக இருக்கும். பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். பயிற்சியுடன் கூடிய பணி உயர்வு ஏற்படும். அலைச்சல் மிகுதியால் உடல் சோர்வு உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு சிறந்த உதாரணமாகவும், வழிகாட்டியாகவும் உங்களின் செயல்பாடுகள் இருக்கும்.
பெண்களுக்கு :
விரும்பிய வண்ணம் திருமணம் கைகூடும். புத்திர பாக்கியத்தை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். தம்பதிகளிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு மேலோங்கும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். மூத்த சகோதர சகோதரிகளின் அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். மறுமணம் எதிர்பார்ப்பவர்களுக்கு விரைவில் திருமணம் அமையும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் மற்றும் நட்பு முன்னேற்றமான சூழலை உருவாக்கும். தொலைத்தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.
மாணவர்களுக்கு :
அடிப்படைக்கல்வி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறுவீர்கள். பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை பெறுவதற்கான சூழல்கள் உருவாகும். பட்டப்படிப்பிற்கு அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு படிப்பிற்கேற்ற வேலை அமையும். அரசு தொடர்பான தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும்.
அரசியல்வாதிகளுக்கு :
மேடைகளில் உங்களின் பேச்சாற்றல் வெளிப்பட்டு முன்னேற்ற பாதையை நோக்கி பயணிப்பீர்கள். சுற்றுவட்டாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். வாரிசுகள் வகையில் பெருமைக்குரிய சூழல் உருவாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். பத்திரிக்கைத்துறை மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். ஆன்மீக சார்ந்த பெரியோர்களின் வழிகாட்டலும், ஆலோசனையும் பெரிதும் உதவிக்கரமாக இருக்கும். சமயோசிதமான செயல்பாட்டினால் பிரபலமாகப் பேசப்படுவீர்கள்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த மெய்யறிவு சிறப்பாக இருக்கும். இணையதள செயல்பாட்டினால் புதிய செயற்கரிய செயல்களை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான பயணம் மூலம் சுவாரஸ்யமான அனுபவங்களை பெறுவீர்கள். மனோதைரியம் மற்றும் பொறுமையும் வெளிப்படும் வகையில் செயல்பாடுகள் அமையும். புகைப்பட கலைஞர்கள் தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் சரியான காலமாக இருக்கும். மற்றவர்களின் ஒத்துழைப்பால் பல பெரிய செயல்களையும் எளிதாக முடிக்கப் போகிறீர்கள்.
விவசாயிகளுக்கு :
மஞ்சள் பயிர்களின் விளைச்சல் நன்றாக இருக்கும். சொத்துக்களில் இருந்துவந்த சங்கடங்கள் விலகி சுபிட்சம் உண்டாகும். மலர்த்தோட்டம் வைத்து விவசாயம் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். கீரை வகை விளைச்சல் சிறப்பாக இருக்கும். வாசனை திரவியம் மற்றும் வாசனை பொருட்கள் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். நார்சத்து மிகுந்த காய்கறிகள் பயிரிடுவதன் மூலம் விளைச்சல் மேம்படும்.
வியாபாரிகளுக்கு :
தானியம் சம்பந்தமான வியாபாரிகளுக்கு முன்னேற்றமான காலம் இது. மருந்துத்துறையில் உள்ளவர்கள் சிறப்பான முன்னேற்றம் அடைவீர்கள். தங்களது தொழிலுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் சிறப்பாக இருக்கும். தொழில் சார்ந்த புதிய நுட்பங்களை செயல்படுத்துவீர்கள். இணையம் சார்ந்த வர்த்தகத்தில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் லாபம் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் ஒத்துழைப்பு அபிவிருத்திக்கான சூழலை உருவாக்கும்.
வழிபாடு:
தேனியில் உள்ள குச்சனூர் சனீஸ்வர சுவாமியை வழிபட ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்
*மீனம் ராசியின்*

மிகப்பெரிய பிரச்சனைகளையும் மிருதுவாக கையாளும் மீன ராசி நேயர்களே..!!
இதுவரை பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் இனிவரும் காலங்களில் ஜீவன ஸ்தானத்தில் இருந்து தங்களின் எண்ணத்தை செயல் வடிவமாக மாற்றுவார். தனவரவுகள் சிறப்பாக அமையும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகையால் குடும்பத்தில் குதூகலமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
இயற்கை சுபரான குருதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து குடும்ப, சுக மற்றும் ரண ருண ஸ்தானத்தையும் பார்க்கின்றார். குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாதத்திறமையால் எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். புதிய நபர்கள் மூலம் வருமானம் மேம்படும். தொழில் செய்யும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
உறவினர்களின் ஆதரவால் சாதகமான சூழல் உண்டாகும். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப செயல்கள் செய்து மனம் மகிழ்வீர்கள். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய வெற்றிகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த புதிய லட்சியம் மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அரசு சார்ந்த துறையில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக அமையும். பொதுமக்கள் பணியில் உள்ளவர்களுக்கு மக்கள் தொடர்பு சிறப்பாக இருக்கும். பணி உயர்வுக்கான பயிற்சிக்கு சென்று வருவீர்கள். வருமான நிலை உயரும். கூடுதலாக மற்றொரு தொழில் செய்யும் சூழல் உருவாகும்.
பெண்களுக்கு :
போட்டித் தேர்வு எழுதிய பெண்களுக்கு அரசு சார்ந்த வேலைவாய்ப்பு அமையும். குடும்பத்தில் தனவரவுகள் அதிகரித்து பொருளாதார நிலை சீராக இருக்கும். ஆரம்ப கல்வி நிலையத்தில் ஆசிரியர் பணி மற்றும் கடைநிலை ஊழியர் பணி ஆகியவைக்கு முயற்சி செய்தால் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் கையாளுவதில் சற்று கவனம் வேண்டும்.
மாணவர்களுக்கு :
அடிப்படை கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்கள் பெற வாய்ப்புகள் உள்ளது. குருகுலம் கல்வியை பயில்பவர்களுக்கு கல்வியில் சாஸ்திர ஞானம் பெருகும். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் கண்காட்சி மற்றும் மாநாடுகளில் கலந்துகொண்டு தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அமையும். படித்து முடித்தவுடன் விரும்பிய துறையில் எதிர்பார்த்த வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு :
குடும்பத்தில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கலைத்துறையில் முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். இதுவரை தடைபட்டு கொண்டிருந்த வாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கற்பனைத் திறன் சிறப்பாக இருக்கும். வருமான நிலை உயரும். நிகழ்கால நிகழ்வுகள் மற்றும் கிடைக்கும் அனுபவம் கொண்டு உருவாக்கும் படைப்புகளுக்கு ஆதரவுகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். இதுவரை தங்களுக்கு விரோதிகளாக இருந்தவர்கள் இனிமேல் நேசக்கரம் நீட்டுவார்கள். எதிர்காலம் குறித்து திடமான முடிவுகளை எடுக்க ஏற்றமான காலம் இது. தலைமைப் பொறுப்புகள் தங்களை தலை தூக்கி நிறுத்தப் போகிறது. குடும்ப உறுப்பினர்களிடம் கிடைக்கும் ஆதரவால் மனதில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மற்றும் ஆதரவுகள் மேம்படும்.
விவசாயிகளுக்கு :
புதிய பயிர் ரகங்களை வெளியிட்டு அதன்மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். கோதுமை, மிளகு போன்றவற்றின் விளைச்சல் அமோகமாக இருக்கும். ரசாயனம் சம்பந்தப்பட்ட பொருட்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். எள், கடுகு ஆகியவையில் இருந்து பெறப்படும் எண்ணெயை தயாரிப்பதன் மூலம் லாபம் பெருகும். விவசாய துறைகளில் புதிய தொழில்நுட்ப கருவிகளின் உதவிகளால் புதிய பரிணாமத்தை நோக்கி முன்னேற்றம் காண்பீர்கள்.
வியாபாரிகளுக்கு :
சுயதொழில் சார்ந்த எண்ணம் கொண்டவர்கள் எண்ணத்தை செயல் வடிவமாக மாற்றுவீர்கள். தங்களது தொழிலுக்கு நண்பர்களின் உதவி சிறப்பாக அமையும். வாழ்க்கை துணையின் ஆலோசனை தங்களை தொழிலில் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும். பூர்வீக சொத்துக்களில் உள்ள ஏதேனும் ஒரு பங்கு தங்களுக்கு உதவியாக இருக்கும். ஆலய வழிபாடுகளை மேற்கொள்வது நன்று. புதிய நிர்வாகம் அல்லது அறக்கட்டளை போன்றவற்றை சுயமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தங்களது கனவுகளை நோக்கி செல்ல வேண்டிய பொன் போன்ற காலம் இது.
பரிகாரம் :
வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீரங்கம் சென்று மகாலட்சுமி வழிபாடு செய்ய சகல விதமான ஐஸ்வர்யங்களும் கைகூடும்.