தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி-அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்ய முடிவு.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பது குறித்து ஆராயப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அரசுமுறை பயணமாக பின்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்று வந்தார்.
அந்த நாட்டின் பின்பற்றப்படும் கல்வி முறைகள் குறித்து அறிந்து வருவதற்காக சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தனது சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பிய அவர் நேற்று ஈரோட்டில் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அப்பொழுது அவர் பேசுகையில், பின்லாந்து நாட்டில் மாணவர்கள் அனைவரும் படிக்கும் போதே தொழிற்பயிற்சி பயிற்சி வழங்கப்படுகிறது.
இது போன்ற பாட திட்டத்தை தமிழகத்திலும் கொண்டு வந்து 9-ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி அளிப்பது குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்