வெத்தல போட்டு எச்சி துப்பினா. ஆயிரம் ரூவா அபராதம் கண்ணா..!
பொது இடத்துல எச்சில் துப்பணும்னு ஆசையா இருக்கா… ஊட்டில அபராதம் அதுக்கு ஆயிரம் ரூபாதான் அபராதம் கண்ணா!
ஆம். உங்களிடம் ஆயிரம் ரூபாய் பாக்கெட்டில் இருந்தால் நீங்க எச்சில் துப்பலாம்! நீலகிரியில் சுகாதாரத்தை காக்க பொது இடங்களில் எச்சில் துப்பினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது!
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சுகாதாரத்தைக் கடைபிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது! முதல்கட்டமாக 20 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு நடைமுறையிலுள்ளது !
ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் குளிர்பான பாட்டில்கள் பயன்பாடு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது!
தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப் பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இதுகுறித்து கூறுகையில், புகையிலை பான்மசாலா குட்கா வெற்றிலை பாக்கு ஆகியவற்றை மென்று பொது இடங்களில் துப்பினால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்! கண்காணிப்பு பணியில் உள்ளாட்சி அமைப்பினர் ஈடுபடுவார்கள்! இந்த உத்தரவுக்கு மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்!
Posted via Blogaway Pro