சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய தென்கிழக்கு கடல் பகுதிக்கு அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார்.