நீண்டதூர பயணத்திற்கு என்றால் ரயிலில் செல்ல IRCTC இணையதளத்திற்கு சென்று டிக்கெட் எடுக்கலாம். புறநகர் ரயில் பயணம் மேற்கொள்வதற்கான சீசன் டிக்கெட்டை பெரிய வரிசையில் நின்று எடுக்க வேண்டியிருக்கிறதே? என்று கவலைப்படுகிறீர்களா…..உங்களுக்குத்தான் இந்த செய்தி.
UTS செயலி மூலம், புறநகர் ரயில்களில் பயணிப்பதற்கான சீசன் டிக்கெட்டை பதிவு செய்து பெருமளவிலான பணத்தை சேமிக்கலாம். உதாரணமாக மும்பையின் அந்தேரி பகுதியில் இருந்து சர்ச்கேட் பகுதிக்கு புறநகர் ரயிலில் செல்ல முதல் வகுப்பு கட்டணமாக ரூ.105ம், இரண்டாம் வகுப்பில் செல்ல ரூ.10ம் செலவாகிறது. இதுவே சீசன் டிக்கெட் எடுத்தால், மாதம் ஒன்றிற்கு முதல்வகுப்பில் என்றால் ரூ.650ம், இரண்டாம் வகுப்பில் பயணம் என்றால் ரூ.215 மட்டுமே செலவாகிறது. மற்றொரு மகிழ்ச்சியான விசயம் என்னவென்றால், இந்த சீசன் டிக்கெட்டை வைத்துக்கொண்டு எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.
UTS செயலி, தற்போது ஆண்ட்ராய்ட், விண்டோஸ் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் வெர்சன்களில் பயன்பாட்டில் உள்ளது.
புறநகர் ரயில்களில் பயணிக்க UTS செயலி மூலம் சீசன் டிக்கெட் எடுக்கும் வழிமுறை
1. UTS செயலியை டவுன்லோடு செய்துகொள்ளவும்.
2. Login பிரிவில், கேட்கப்படும் விபரங்களை பதிவு செய்யவும்.
3. விபரங்களை பதிவு செய்து லாகின் செய்தபிறகு, Book ticket பிரிவிற்கு செல்லவும்.
4. அதில் சீசன் டிக்கெட்டை தேர்வு செய்து Book & Travel (Paperless) ஆப்சனை தேர்வு செய்யவும்.
5. பின் Issue Ticket என்பதை தேர்வு செய்யவும். ( ஒருவேளை நீங்கள் உங்களது சீசன் டிக்கெட்டை புதுப்பிப்பதாக இருந்தால் Renew Ticket ஆப்சனை தேர்வு செய்து, பழைய சீசன் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள UTS எண்ணை அதில் பதிவிடவும்)
6. எந்த ஸ்டேசனிலிருந்து எந்த ஸ்டேசன் வரை பயணம் செய்ய இருக்கிறீர்கள் என்பைத தேர்வு செய்து Done பட்டனை அழுத்தவும்.
7. சீசன் டிக்கெட்டின் கால அளவு, முதல் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பு, ஏசி அல்லது நான் ஏசி ரயில் உள்ளிட்டவைகளையும் நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.
8. எல்லா விபரங்களையும் பதிவு செய்தபின்னர், payment gateway தேர்வு செய்யவும். அதில் உங்களது முகவரி உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்து Done பட்டனை அழுத்தவும்.
9. Get Fare பிரிவிற்கு சென்று payment gateway ஆப்சனை தேர்வு செய்தபின் விபரங்களை சரிபார்த்து Book Ticket பிரிவிற்கு சென்று Accept பட்டனை அழுத்தவும்.
10. R-Wallet பிரிவின் மூலம் Make Payment தேர்வு செய்து பணத்தை செலுத்தி சீ்சன் டிக்கெட்டை பெறலாம். சீசன் டிக்கெட், உங்கள் செயலியில் காட்டும், தேவைப்படும்போது UTS செயலியில் உள்ள முன்பக்கத்தில் உள்ள Show Booked Ticket தேர்வு செய்வதன் மூலம் டிக்கெட்டை தேவையான நேரங்களில், பார்க்கவோ பயணிக்கவோ முடியும்.