இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி, ராணுவத்தின் முத்திரையை கையுறையில் பயன்படுத்தியதை கேள்வி எழுப்பியதால், அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஐ.சி.சி-யை கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதையை விக்கெட் கீப்பருமான தோனிக்கு, 2011-ம் ஆண்டு ராணுவத்தில் கவுரவ லெப்டினட் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் கையுறையில் துணை ராணுவத்தின் முத்திரை இடம்பெற்றிருந்தது.
தியாகம் என்று பொருள்படும் அந்த முத்திரையை தோனி பயன்படுத்திதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. எனினும், விதிமுறைகளின் படி அது சரியானதா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர், “தோனி ஒன்றும் போருக்குச் செல்லவில்லை” என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்த முத்திரை தோனி அகற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, பிசிசிஐ-க்கு வலியுறுத்தியது.
இதனால், ஐசிசி மீது கோபமடைந்த தோனி ரசிகர்கள், அந்த அமைப்பை கிண்டல் செய்ய தொடங்கினர்.
நேற்று ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத்தீவுகள் அணி மோதிய போட்டியில், கிறிஸ் கெயிலுக்கு மூன்று முறை தவறான தீர்ப்பை அளித்தார்.முதல் இரண்டு முறை டி.ஆர்.எஸ் மூலம் பிழைத்த கெயில், மூன்றாவது முறை எல்.பி.டபிள்யூ ஆனார். அவுட் ஆகி மைதானத்தைவிட்டு வெளியேறிய பின்னர் அது நோபால் என்று தெரிய வந்தது.
இதனால், போட்டி நடுவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. தற்போது, தோனி விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் ஐஐசி, முதலில் நடுவர்களை சரிசெய்யட்டும் என்று தோனி ரசிர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இதுபற்றி பிசிசிஐ அமைப்பின் வினோத் ராய் கூறுகையில், “தோனி, கிளவுஸில் வைத்திருக்கும் முத்திரை ராணுவத்தினுடையது அல்ல. மேலும், அந்த முத்திரையை பயன்படுத்த அவர் சார்பில் பிசிசிஐ முறைப்படி ஐசிசி-யிடம் அனுமதி வாங்கிவிட்டது” என்று விளக்கம் அளித்துள்ளார்.