மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
1. டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் (Driver Mechanical Transport)
2. எலக்ட்ரீசியன் (Electrician)
3. வைக்கிள் மெக்கானிக் (Vehicle Mechanic)
4. மல்டி ஸ்கில் ஒர்க்கர் (Cook)
காலிப்பணியிடங்கள்:
1. டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் - 388
2. எலக்ட்ரீசியன் - 101
3. வைக்கிள் மெக்கானிக் - 92
4. மல்டி ஸ்கில் ஒர்க்கர் - 197
மொத்தம் = 778 காலியிடங்கள்
முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 31.05.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.07.2019
வயது வரம்பு:
1. மல்டி ஸ்கில் ஒர்க்கர் பணிக்கு, குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 25 வயது வரை இருத்தல் வேண்டும்.
2. மற்ற பிற பணிகளுக்கு, குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 27 வயது வரை இருத்தல் வேண்டும்.
ஊதியம்:
1. மல்டி ஸ்கில் ஒர்க்கர் பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.18,000 முதல் அதிகபட்சமாக ரூ.39,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
2. மற்ற பிற பணிகளுக்கு, குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல் அதிகபட்சமாக ரூ.44,400 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வுக்கட்டணம்:
1. பொது / ஓபிசி பிரிவினர் / முன்னாள் ராணுவத்தினர் - ரூ.50
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
விண்ணப்பதாரர்கள் வங்கியில் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டும்.
Commandant, GREF Centre, Pune-411 015,
in Public Fund Account No. 11182905409 of State Bank of India,
Khadi Branch, Pune Code No. 01629.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, பத்தாம் வகுப்பில் தேர்ச்சியோ அல்லது மெட்ரிகுலேசன் படிப்பில் தேர்ச்சியோ பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் பணிகளுக்கேற்ப சான்றிதழ் படிப்பை பயின்றும், பணி அனுபவமும் பெற்று இருத்தல் வேண்டும்.
குறிப்பு:
டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் போன்ற பணிக்கு, ஹெவி மோட்டார் டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://www.bro.gov.in- என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்பலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015
தேர்வு செய்யும் முறை:
1. உடற்தகுதி தேர்வு
2. செய்முறைத் தேர்வு
3. எழுத்துத் தேர்வு
4. மருத்துவத் தகுதித் தேர்வு
மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, http://www.bro.gov.in/WriteReadData/linkimages/9558409500-Untitled.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
SOURCE PUTHIYA THALAIMURAI