ஏழு பதவிகளில், 83 காலியிடங்களுக்கான தேர்வு முடிவுகள்வெளியிடப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஏழு வகை பதவிகளுக்கு, பல்வேறு கட்டமாக தேர்வுகள் நடந்துள்ளன.மீன் வள உதவி ஆய்வாளர், கூட்டுறவு துறை இளநிலை ஆய்வாளர், வணிக துறை இளநிலை ரசாயனர் பதவி உட்பட, 83 காலியிடங்களுக்கு, இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதிவிபரம், டி.என்.பி.எஸ்.சி.,யின்,
www.tnpsc.gov.in
என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.