மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விமான பயண பாதுகாப்பு கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி உள்நாட்டு பயணிகளுக்கு தற்போதைய பாதுகாப்பு கட்டணம் ரூ.130 என்று இருப்பது ரூ.150 ஆக உயர்த்தப்படுகிறது. வெளிநாட்டு பயணிகளுக்கு 3.25 டாலரில் இருந்து 4.85 டாலராக அதிகரிக்கிறது.
இந்த கட்டண உயர்வால் விமான டிக்கெட் கட்டணம் சிறிது உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.