'நெட் பேங்கிங்' வசதி மூலம், பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதோடு, பலவிதங்களில் வங்கிச் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தும் போது, வங்கிகள் அதற்கான இணையதளத்தை அமைத்துள்ள விதத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். முதலில், வங்கிகளின் இணையதள அமைப்பை புரிந்து கொண்டால், எந்ததெந்த சேவையை எப்படி அணுகலாம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். பரிவர்த்தனை, மின் கட்டணம், தொலைபேசி கட்டணம் உள்ளிட்ட பெரும்பாலான பில் தொகையை நெட் பேங்கிங் வசதி மூலம் செலுத்தலாம். நெட் பேங்கிங்கில் ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் மற்றும் நெஃப்ட் முறை வசதிகள் இருக்கும். இந்த முறைகளில் நீங்கள் பணம் அனுப்பினால் வங்கிகள் உங்களிடம் கட்டணம் வசூலிக்கும்.
1. ஐ.எம்.பி.எஸ் (IMPS) ரூ 1000 வரை பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு எந்தவித கட்டண சேவையும் இல்லை. 10,000 ரூபாய் வரையிலான பணபரிமாற்றத்திற்கு 1 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் வசூலிக்கிறது. 10,000 முதல் 1 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 2 ரூபாய் + ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன.
2. ஆர்.டி.ஜி.எஸ் (RTGS) 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 25 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன. 5 லட்சத்திற்கும் மேல் பணபரிமாற்றத்திற்கு 50 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகை. டென்ஷன், அபராதம் எந்த தொல்லையும் இல்லை. எஸ்பிஐ- யில் அட்டகாசமான சேமிப்பு திட்டம்!
3. நெஃப்ட் (NEFT) ரூ 1000 வரை பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு 2.5 ரூபாய் + 1 ரூ ஜி.எஸ்.டி தொகை.10,000 முதல் 1 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 5 ரூபாய் + 2 ரூ ஜி.எஸ்.டி தொகை. 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 15 ரூபாய் + 3 ரூ ஜி.எஸ்.டி தொகை வசூலிக்கப்படுகின்றன. 5 லட்சத்திற்கும் மேலான பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகை வசூலிக்கப்படும்.