01.07.2019 முதல் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட விரைவு ரயில், பயணிகள் ரயில்களின், வந்து சேரும் / புறப்படும் நேரம் மாற்றம், சேவை நாட்கள் மாற்றம் மற்றும் விரைவுபடுத்தப்பட்டுள்ள ரயில்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
விரைவு ரயில்கள் வருகை / புறப்பாடு நேரம் மாற்றம்:
வண்டி எண் 12651 மதுரை - ஹஸ்ரத் நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி (வாரம் இருமுறை) எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து இரவு 12.30 மணிக்கு பதிலாக இரவு 12.45 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 12652 ஹஜரத் நிஜாமுதீன் - மதுரை சம்பர்க் கிராந்தி (வாரம் இருமுறை) எக்ஸ்பிரஸ் மதுரைக்கு அதிகாலை 03.25 மணிக்கு பதிலாக அதிகாலை 02.25 மணிக்கு வந்து சேரும்.
வண்டி எண் 12638 மதுரை - சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து இரவு 08.40 மணிக்கு பதிலாக இரவு 08.45 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 12637 சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரைக்கு அதிகாலை 05.45 மணிக்கு பதிலாக அதிகாலை 05.30 மணிக்கு வந்து சேரும்.
வண்டி எண்.17615 கச்சிகுடா - மதுரை (வாராந்திர) எக்ஸ்பிரஸ் மதுரை ரயில் நிலையத்திற்கு காலை 06.30 மணிக்கு பதிலாக காலை 06.15 மணிக்கு வந்து சேரும்
வண்டி எண் 16344 மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து மதியம் 03.15 மணிக்கு பதிலாக மதியம் 03.20 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 16343 திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் மதுரைக்கு நண்பகல் 12.15 மணிக்கு பதிலாக முற்பகல் 11.50 மணிக்கு வந்து சேரும்வண்டி எண் 11043 மும்பை லோக்மான்ய திலக் முனையம் - மதுரை (வாராந்திர) எக்ஸ்பிரஸ் மதுரைக்கு காலை 10.10 மணிக்கு பதிலாக காலை 09.45 மணிக்கு வந்து சேரும்.
வண்டி எண் 22631 மதுரை - பிகானீர் அநுவரட் (வாராந்திர) எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து முற்பகல் 11.45 மணிக்கு பதிலாக முற்பகல் 11.55 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 22632 பிகானீர் அநுவரட் (வாராந்திர) - மதுரை எக்ஸ்பிரஸ் மதுரைக்கு மாலை 06.45 மணிக்கு பதிலாக மாலை 06.40 மணிக்கு வந்து சேரும்.
வண்டி எண் 19604 ராமேஸ்வரம் - அஜ்மீர் ஹம்சபார் (வாராந்திர) எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரத்திற்கு இரவு 10.15 மணிக்கு பதிலாக இரவு 10.00 மணிக்கு வந்து சேரும்.
வண்டி எண் 22621 ராமேஸ்வரம் - கன்னியாகுமரி (வாரம் மும்முறை) எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரத்திலிருந்து இரவு 08.50 மணிக்கு பதிலாக இரவு 08.55 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 16791 திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் திருநெல்வேலியிலிருந்து இரவு 10.30 மணிக்கு பதிலாக இரவு 10.45 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 16792 பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் திருநெல்வேலிக்கு காலை 06.30 மணிக்கு பதிலாக காலை 06.15 மணிக்கு வந்து சேரும்.
வண்டி எண் 16790 ஸ்ரீ வைஷ்ணவ தேவி கட்ரா - திருநெல்வேலி (வாராந்திர) எக்ஸ்பிரஸ் திருநெல்வேலிக்கு அதிகாலை 12.55 மணிக்கு பதிலாக அதிகாலை 12.45 மணிக்கு வந்து சேரும்வண்டி எண் 12631 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலிக்கு காலை 07.05 மணிக்கு பதிலாக காலை 06.45 மணிக்கு வந்து சேரும்.
வண்டி எண் 16129 சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இணைப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வாஞ்சி மணியாச்சியிலிருந்து இரவு 07.30 மணிக்கு பதிலாக இரவு 07.25 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 16130 தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இணைப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வாஞ்சி மணியாச்சிக்கு காலை 08.30 மணிக்கு பதிலாக காலை 08.25 மணிக்கு வந்து சேரும்.
வண்டி எண் 16102 கொல்லம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் கொல்லத்திலிருந்து முற்பகல் 11.45 மணிக்கு பதிலாக முற்பகல் 11.55 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 16182 செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டையிலிருந்து மாலை 04.15 மணிக்கு பதிலாக மாலை 04.25 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 16788 ஸ்ரீ வைஷ்ணவ தேவி கட்ரா - திருநெல்வேலி ஹிம்சாக லிங்க் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலிக்கு மாலை 06.30 மணிக்கு பதிலாக மாலை 06.00 மணிக்கு வந்து சேரும்.
வண்டி எண் 12662 செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டையிலிருந்து மாலை 06.15 மணிக்கு பதிலாக மாலை 06.10 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56704 திண்டுக்கல் - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து காலை 06.15 மணிக்கு பதிலாக காலை 06.30 மணிக்கு புறப்படும்வண்டி எண் 56723 மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 06.55 மணிக்கு பதிலாக காலை 06.45 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56721 மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு பதிலாக பிற்பகல் 12.15 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56721 மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு மாலை 04.35 மணிக்கு பதிலாக மாலை 03.55 மணிக்கு ராமேஸ்வரம் ரயில் நிலையம் வந்து சேரும்.
வண்டி எண் 56701 புனலூர் - மதுரை பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திற்கு காலை 06.45 மணிக்கு பதிலாக காலை 06.35 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்து சேரும்.
வண்டி எண் 56732 செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில் செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 06.30 மணிக்கு பதிலாக காலை 06.35 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
வண்டி எண் 56732 செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திற்கு காலை 10.40 மணிக்கு பதிலாக காலை 10.35 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்து சேரும்வண்டி எண் 56736 செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில் செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 03.55 மணிக்கு பதிலாக மாலை 03.50 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
வண்டி எண் 56736 செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திற்கு மாலை 07.35 மணிக்கு பதிலாக மாலை 07.30 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்து சேரும்.
வண்டி எண் 56796 செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயில் செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ;காலை 06.45 மணிக்கு பதிலாக காலை 06.50 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
வண்டி எண் 56796 செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயில் திருநெல்வேலிக்கு காலை 9.00 மணிக்கு பதிலாக காலை 08.55 மணிக்கே வந்து சேரும்.
வண்டி எண் 56802 செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயில் செங்கோட்டையிலிருந்து மாலை 05.55 மணிக்கு பதிலாக மாலை 05.50 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56797 திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 09.25 மணிக்கு பதிலாக காலை 09.20 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56797 திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில் செங்கோட்டைக்கு காலை 11.50 மணிக்கு பதிலாக காலை 11.30 மணிக்கு சென்று சேரும்.
வண்டி எண் 56801 திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 07.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 07.00 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56801 திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில் செங்கோட்டைக்கு காலை 09.25 மணிக்கு பதிலாக காலை 09.15 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.
வண்டி எண் 56803 திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில் செங்கோட்டைக்கு மாலை 04.45 மணிக்கு பதிலாக மாலை 04.20 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.
வண்டி எண் 56735 மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில் செங்கோட்டைக்கு இரவு 09.35 மணிக்கு பதிலாக இரவு 09.30 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.
வண்டி எண் 56763 திருநெல்வேலி - திருச்செந்தூர் பயணிகள் ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 09.30 மணிக்கு பதிலாக காலை 10.00 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56763 திருநெல்வேலி - திருச்செந்தூர் பயணிகள் ரயில் திருச்செந்தூருக்கு முற்பகல் 11.00 மணிக்கு பதிலாக முற்பகல் 11.35 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும்.
வண்டி எண் 56035 திருச்செந்தூர் - திருநெல்வேலி பயணிகள் ரயில் திருச்செந்தூரிலிருந்து காலை 09.15 மணிக்கு பதிலாக காலை 10.00 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56035 திருச்செந்தூர் - திருநெல்வேலி பயணிகள் ரயில் திருநெல்வேலிக்கு முற்பகல் 11.00 மணிக்கு பதிலாக நண்பகல் 12.10 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.
வண்டி எண் 56770 திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் திருச்செந்தூரிலிருந்து முற்பகல் 11.15 மணிக்கு பதிலாக முற்பகல் 11.40 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56334 கொல்லம் - எடமன் பயணிகள் ரயில் கொல்லத்தில் இருந்து காலை 08.45 மணிக்கு பதிலாக காலை 08.55 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56334 கொல்லம் - புனலுர் பயணிகள் ரயில் புனலூருக்கு காலை 10.10 மணிக்கு பதிலாக காலை 10.15 மணிக்கு வந்து சேரும்.
வண்டி எண் 56737 செங்கோட்டை - கொல்லம் பயணிகள் ரயில் செங்கோட்டையிலிருந்து நண்பகல் 12.30 மணிக்கு பதிலாக முற்பகல் 11.40 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56737 செங்கோட்டை - கொல்லம் பயணிகள் ரயில் கொல்லத்திற்கு மாலை 05.20 மணிக்கு பதிலாக மாலை 03.55 மணிக்கு சென்று சேரும்.
வண்டி எண் 56366 புனலூர் - குருவாயூர் பயணிகள் ரயில் புனலூரில் இருந்து மாலை 05.00 மணிக்கு பதிலாக மாலை 05.30 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 76838 விருதுநகர் - காரைக்குடி பயணிகள் ரயில் விருதுநகரிலிருந்து காலை 06.10 மணிக்கு பதிலாக காலை 06.00 மணிக்கு புறப்படும்.வண்டி எண் 76838 விருதுநகர் - காரைக்குடி பயணிகள் ரயில் காரைக்குடிக்கு காலை 09.35 மணிக்கு பதிலாக காலை 09.40 மணிக்கு சென்று சேரும்.
வண்டி எண் 56741 தூத்துக்குடி - திருநெல்வேலி பயணிகள் ரயில் திருநெல்வேலிக்கு இரவு 08.35 மணிக்கு பதிலாக இரவு 08.30 மணிக்கு வந்து சேரும்.
வண்டி எண் 56722 ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில் ராமேஸ்வரத்திலிருந்து முற்பகல் 11.20 மணிக்குப் பதிலாக முற்பகல் 11.15 மணிக்கு புறப்படும்
07.07.2019 onwards.08.07.2019 முதல் வண்டி எண் 16862 கன்னியாகுமரி - புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் கன்னியாகுமாரியிலிருந்து வெள்ளிக்கிழமைக்கு பதிலாக திங்கட்க்கிழமைகளில் புறப்படும்
நெல்லை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளளன.
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் நெல்லை ரயில் இரவு 8.10 மணிக்குப் பதிலாக 7.50 மணிக்குப் புறப்படும். இதேபோன்று சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும், ரயில் நிலையங்களுக்கு வந்து சேரும் 43 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த நேர மாற்றம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.
கொல்லம், நிஜாமுதீன் ரயில்கள்: வெளியூர்களில் இருந்து சென்னை எழும்பூர் ரயில்நிலையத்துக்கு வந்தடையும் 13 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினசரி அதிகாலை 3.45 மணிக்கு வந்து சேரும் விரைவு ரயில் நேரம் மாற்றப்பட்டு, 5 நிமிஷம் முன்னதாக அதிகாலை 3.40 மணிக்கு எழும்பூர் வந்து சேரும். கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினசரி காலை 8.10 மணிக்கு வந்து சேரும் விரைவு ரயில் நேரம் மாற்றப்பட்டு, தினசரி காலை 8.20 மணிக்கு வந்து சேரும்.
நிஜாமுதீனில் இருந்து மதுரைக்கு புதன், வெள்ளிக்கிழமை இயக்கப்படும் நிஜாமுதீன் விரைவு ரயில் சென்னை எழும்பூருக்கு மாலை 6.05 மணிக்கு வந்துசேரும்.
இந்த ரயிலின் நேரம் மாற்றப்பட்டு, 10 நிமிஷம் முன்னதாக மாலை 5.55 மணிக்கு வந்து சேரும்.
இதுபோன்று, நிஜாமுதீனில் இருந்து எழும்பூர் வழியாக கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்பட்டு, எழும்பூருக்கு 10 நிமிஷம் முன்னதாக மாலை 5.55 மணிக்கு வந்து சேரும்.
இதுதவிர, பிற இடங்களில் இருந்து எழும்பூருக்கு வந்து சேரும் 10 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை-நெல்லை, குருவாயூர் ரயில்கள்: சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூருக்கு தினசரி காலை 8.15 மணிக்கு புறப்பட வேண்டிய குருவாயூர் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்பட்டு காலை 8.25 மணிக்கு புறப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு தினசரி இரவு 7.50 மணிக்கு புறப்படவேண்டிய விரைவுரயில் நேரம் மாற்றப்பட்டு, இரவு 8.10 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு தினசரி இரவு 8.10 மணிக்கு புறப்படும் நெல்லை விரைவு ரயிலின் நேரம் மாற்றப்பட்டு, இரவு 7.50 மணிக்கு புறப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூருக்கு தினசரி இரவு 10.40 மணிக்கு புறப்படும் உழவன் விரைவுரயில் நேரம் மாற்றப்பட்டு, தினசரி இரவு 10.55 மணிக்கு புறப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து சேலத்துக்கு தினசரி இரவு 11 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் நேரம் மாற்றப்பட்டு, தினசரி இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த நேரம் மாற்றம் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு வரும் ரயில்கள் நேரம் மாற்றம்:
மேட்டுபாளையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு தினசரி காலை 5.05 மணிக்கு வந்தடையும் நீலகிரி விரைவு ரயில் 5 நிமிஷம் முன்னதாக காலை 5 மணிக்கு வந்து சேரும்.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினசரி நண்பகல் 12 மணிக்கு வந்து சேரும் திருவனந்தபுரம் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்பட்டு, காலை 10.15 மணிக்கு வந்துசேரும். இதுதவிர, 4 ரயில்கள் வந்துசேரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
புறப்படும் ரயில்கள் நேரம் மாற்றம்:
சென்னை சென்ட்ரலில் இருந்து கே.எஸ்.ஆர். பெங்களூருவுக்கு தினசரி காலை 7.50 மணிக்கு புறப்படவேண்டிய ரயிலின் நேரம் மாற்றப்பட்டு 10 நிமிஷம் முன்னதாக காலை 7.40 மணிக்கு புறப்படும். இதுதவிர, 9 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.