டாஸ்மாக் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு வாணிப கழக இணையதள அறிவிப்பில் இளநிலை உதவியாளர்களுக்கான சிறப்புத்தேர்வுவிற்கான பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்து தகுதியான நபர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டது. அதன்படி, பாடத்திடங்களாக தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம், தமிழ்நாடு மதுபானம்(மொத்த விற்பனையில் வழங்கல்), மதுபான சில்லறை விற்பனை(கடைகள் மற்றும் மதுக்கூடங்களில்), பகுப்பாய்வு புரிந்துணர்தல், பரிமான நுண் அறிவு, மொழி அறியும் திறன்/புரிந்துகொள்ளும் திறன், பொது அறிவு ஆகிய பாடத்திட்டங்களின் மூலம் கொள்குறி வினாக்கள் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு செய்யப்பட்டது.
தற்போது மேற்கண்ட பாடத்திட்டங்கள் அடங்கிய விரிவான தேர்வு பாடத்திட்டம் டாஸ்மாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட மேலாளர்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இளநிலை உதவியாளருக்கான சிறப்பு தேர்விற்கான பாடத்திட்ட விவரத்தினை அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தெரிவிப்பதுடன் அனைத்து மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் வரும் 8ம் தேதி விழிப்புணர்வு நடத்திட வேண்டும்.
தேர்வு வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள விவரத்தினை தெரிவித்திடவும், மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தனியாக தேர்வு மையம், தேர்வு கூட நுழைவுச்சீட்டு தனியாக அனுப்பப்படும் என்ற விவரத்தினை தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விழிப்புணர்வு கூட்டம் அனைத்து மண்டலங்களிலும் நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து அனைத்து மண்டல மேலாளர்களும் அறிக்கை அனுப்பிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.