உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் நிலையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது.
இதில் இன்று நடக்கும் இந்தியாவுக்கான முதல் ஆட்டத்திற்கான பயிற்சியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரிட் பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் சோதனைக்கான முடிவு இன்று வெளியிடப்படும் என தெரிகிறது.
சவுதாம்ப்டனில் நடக்க இருக்கும் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் இந்தியா தனது முதல் போட்டியில் ஆட உள்ளது. இந்நிலையில் தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் இந்த போட்டியில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
பயிற்சியின் போது இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது மற்ற வீரர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பும்ரா பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த ஊக்கமருந்து தடுப்புப் பிரிவினர் அவரை தனியாக அழைத்துச் சென்றனர்.
பின்னர் அவருக்கு இரண்டு கட்டமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது. முதலில் சிறுநீர் பரிசோதனையும் அதைத் தொடர்ந்து 45 நிமிடம் கழித்து ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கான முடிவு இன்று காலை வெளியிடப்படும் என தெரிகிறது.
அவருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. இதை தொடர்ந்து வேறு யாருக்கும் சோதனை நடத்தப்பட்டு உள்ளதா எனவும் கிரிக்கெட் வாரியம் விசாரித்து வருகிறது. ஊக்கமருந்து சோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்தி உள்ளார் என தெரியவந்தால் அவர் இன்றைய போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என தெரிகிறது.
இந்த உலக கோப்பையை பொறுத்தவரை பும்ரா தான் இந்தியாவின் துருப்புச் சீட்டு. அப்படி இருக்கையில் போட்டிக்கு முதல் நாள் பும்ராவை ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தி அவரை மனோ தத்துர ரீதியில் பின்னடைவை சந்திக்க வைக்க முயற்சி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.