Type Here to Get Search Results !

ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் அதிகம் ஆக்கிரமிப்பது இந்த செயலி தான்.!


வாட்ஸ்அப் பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்படும் செயலி என்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளில் வாட்ஸ்அப் குறுந்தகவல் அனுப்புவது மட்டுமின்றி, கான்டாக்ட், லொகேஷன், டாக்யூமென்ட், புகைப்படம் மற்றும் வீடியோ என பலவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. மாதக்கணக்கில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் போது, இவை ஸ்மார்ட்போனின் மெமரியை ஆக்கிரமித்துக் கொள்ளும். குறிப்பாக மெமரியை அவ்வப்போது அழிக்காதவர்களுக்கு இது மிகப்பெரும் பிரச்சனையாக இருக்கும்.





வாட்ஸ்அப் சாட்களில் வரும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தானாக டவுன்லோடு செய்யக் கோரும் ஆப்ஷன் செயல்படுத்தப்படும். இதனை டிசேபிள் செய்யும் போது தானாக டவுன்லோடு ஆவதை தடுத்து, ஸ்மார்ட்போன் மெமரி காலியாவதை தவிர்க்க முடியும். வாட்ஸ்அப் மீடியா போன் கேலரியில் சேமிக்க விடாமல் செய்ய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.





ஆண்ட்ராய்டு தளத்தில் எப்படி செய்ய வேண்டும்?





1 – வாட்ஸ்அப் திறக்கவும்





2 – வலதுபுறம் காணப்படும் மூன்று புள்ளிகள் கொண்ட ஆப்ஷனை க்ளிக் செய்யவும்





3 – செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்





4 – சாட்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்யவும்





5 – மீடியா விசிபிலிட்டி ஆப்ஷனை க்ளிக் செய்யவும்





6 – இதனை ஆஃப் செய்யவும்





இந்த செட்டிங்கை அனைத்து சாட்களுக்கு செயல்படுத்த வேண்டாம், சிலருக்கு மட்டும் செயல்படுத்த வேண்டும் எனில் கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:





1 – சாட் ஸ்கிரீனை திறக்கவும்





2 – வலதுபுறம் காணப்படும் மூன்று புள்ளிகள் கொண்ட ஆப்ஷனை க்ளிக் செய்யவும்





3 – வியூ கான்டாக்ட் ஆப்ஷனை தேர்வு செய்யவும்





4 – மீடியா விசிபிலிட்டி ஆப்ஷனை க்ளிக் செய்யவும்





5 – இனி “Show newly downloaded media from this chat in your phone’s gallery?” எனும் வாசகம் திரையில் தோன்றும்





6 – இதில் No பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்





இவ்வாறு செய்ததும் வாட்ஸ்அப் மீடியா ஸ்மார்ட்போன் கேலரியில் டவுன்லோடு ஆகாது. குறிப்பாக இந்த ஆப்ஷன் க்ரூப் சாட்களுக்கும் பொருந்தும்.





ஐபோனில் எப்படி செய்ய வேண்டும்?





1 – வாட்ஸ்அப் திறக்கவும்





2 – வலதுபுறம் காணப்படும் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்





3 – சாட்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்யவும்





4 – இனி Save to Camera Roll ஆப்ஷனை கண்டறிய வேண்டும்





5 – அதனை ஆஃப் செய்யவும்





எதிர்காலத்தில் ஐபோனில் மீடியாவை டவுன்லோடு செய்ய பின்வரும் ஆப்ஷன்களை பயன்படுத்தலாம்





1 – வாட்ஸ்அப் திறக்கவும்





2 – வலதுபுறம் இருக்கும் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்





3 – இனி டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் யூசேஜ் ஆப்ஷனை தேர்வு செய்யவும்





4 – அடுத்து வாட்ஸ்அப் எப்போது புகைப்படம், ஆடியோ, வீடியோ மற்றும் டாக்யூமென்ட்களை டவுன்லோடு செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும்





5 – ஒவ்வொரு ஆப்ஷனை தேர்வு செய்து Never, Wi-Fi, or Wi-Fi and Cellular உள்ளிட்டவற்றில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்




Top Post Ad

Below Post Ad