* இரவில் தூங்கும் முன் மட்டும் ஏ.சி போட்டு அறையைக் கூலாக வைத்துக்கொள்ளுங்கள். நடு இரவில் ஏ.சியை அணைத்துவிடலாம். அதற்குப் பதிலாக சீலிங் ஃபேன் பயன்படுத்தலாம்.
* மாலை நேரம் தொடங்கியதும் அறையின் வெப்பம் வெளியேற இயற்கைக் காற்றை உள்ளே அனுமதியுங்கள். அதற்கு ஜன்னல் மற்றும் கதவை திறந்து வையுங்கள்.
* ஏ.சி இருக்கும் அறையில் வெப்பம் வெளியேற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வைக்காதீர்கள். உதாரணமாக ஃபிரிஜ், வாஷிங் மிஷின், மைக்ரோவேவ் போன்ற அதிக வெப்பத்தை வெளியேற்றும் பொருட்களை ஏ.சி இருக்கும் அறையில் வைக்க வேண்டாம்.
* இரவு தூங்கும்போது லேப்டாப், கணினி, டிவி போன்றவற்றைப் பயன்படுத்திய பின் அணைத்துவிட்டுத் தூங்கவும்.
இல்லையெனில் அதிலிருந்து வெளியேறும் வெப்பத்தால் ஏ.சி கூடுதலாக இயங்கும்.
* சீலிங் லைட் அணைந்துவிட்டுத் தூங்கவும்.
* மாலை நேரத்தில் வீட்டின் சீலிங் மொட்டை மாடியாக இருந்தால் சுற்றிலும் தண்ணீர் தெளித்து வையுங்கள். இதனால் வெப்பம் குறையும். மேலே அறை இருக்கும் பட்சத்தில் அந்த அறையை கூலாக வைத்துக்கொள்ள ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். சீலிங் ஃபேன் ஓட விடுங்கள்.
* ஏ.சி இருக்கும் அறையை அதிக பொருட்களால் அடைத்து வைக்காதீர்கள். அலங்காரம் என்கிற பெயரில் லைட்ஸும் அதிகமாகப் பயன்படுத்தாதீர்கள்.
* கதவு , ஜன்னல்களில் விரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அறையின் காற்று வெளியேறுகிறதா என்று கவனித்து அதை அடைத்துவிடுங்கள். கதவுக்கு அடியில் நிச்சயம் இடைவெளி இருக்கும். அதை அடைக்க அடியில் துணி வைத்து மூடுங்கள். வெளிக்காற்று உள்ளே வராது. உள் காற்றும் வெளியேறாது.
* மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏ.சி ஃபில்டரை மாற்றுங்கள். வாரம் ஒரு முறை ஃபில்டரை சுத்தம் செய்யுங்கள். ஏ.சி மெக்கானிக் அறிவுரைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.