'பிரண்ட்ஸ்' திரைப்படத்தின் காண்டிராக்டர் நேசமணி கதாபாத்திரம் தற்பொழுது இந்தியா அளவில் ட்ரெண்ட் ஆகி சமூக வலைத்தளங்களை ஆட்டிப்படைத்து வருகிறது.
குறும்புக்கார நெட்டிசன் ஒருவர், பொறியியல் சம்பந்தமான சமூக வலைதள பக்கத்தில், சுத்தியல் குறித்து விளக்க, காண்டிராக்டர் நேசமணியை உள் இழுக்க, அதனை அடிப்படையாக வைத்து 'Pray-For-Nesamani' எனும் ட்விட்டர் டாக் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆட்டிப்படைத்து வருகிறது.