நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் மோடியின் தாயார் ஹீராபென், குஜராத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில் பதவியேற்பு விழாவைக் கண்டுகளித்தார். தன் மகன் மீண்டும் பிரதமராக பதவியேற்றதை பார்த்து, உற்சாகமாக கைதட்டி மகிழ்ந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது.