எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மிக பெரிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்னவென்று பார்ப்போம், நீங்கள் மாதத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் மற்ற வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு எந்தவித அபராத கட்டணமும் இல்லை.
பின்பு தறபோதைய நிலவரப்படி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 8 முதல் 10 வரை இலவசமாக மற்ற வங்கி ஏஎடிஎம்-களில் பணம் எடுத்து வருகின்றனர். ஆனால் இனிமேல் ஒரு குறிப்பிட்ட தொகையை குறைந்த பட்ச தொகையாக வைத்திருக்கும் போது அவர்களுக்கு எஸ்.பி.ஐ ஏடிஎம்களிலும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்களிலும் அன்லிமிடெட் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எஸ்பிஐ வங்கியில் ரூ.25000 மினிமம் பேலன்சாக வைத்திருப்பவர்கள் எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் வரம்பற்ற பணப்பரிவர்த்தனை செய்துக் கொள்ளலாம்.அதேபோன்று 1லட்சம் அல்லது அதற்கு மேல் மினிமம் பேலன்ஸ் தொடர்பவர்கள் வங்கி ஏடிஎம்களில் அன்லிமிடெட் சேவையை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இந்தியாவின் முன்னணி வங்கியான எஸ்.பி.ஐ இதோடு மட்டும் அல்லாமல் தன் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது.
இருப்புத்தொகை ரூ.25,000க்கும் குறைவாக வைத்திருக்கும் வழக்கம் போல் 8 முதல் 10 முறை ஏடிஎம்-ல் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்கில் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக பேலன்ஸ் வைத்திருக்கும்போது அதன் வட்டி விகிதம் மே 1-ம் தேதி முதல் 3.25 சதவீதமாகக் குறையும்.
ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக எஸ்பிஐ வங்கிக் கணக்கில் இருப்புத் தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 3.5 சதவீத வட்டி விகிதம் தொடர்ந்து அளிக்கப்படும்.