செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நவீன யுகத்தில் வாழும் நாம் செல்போன்களை நம் உடலின் ஒரு பகுதியாகவே கருத தொடங்கிவிட்டோம். அதிக நேரம் செல்போன்களை பயன்படுத்துவது மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற உடல் உபாதைகளுக்கு வித்திடுவதும் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஒவ்வொருமுறையும் செல்போன்களில் சமூக வலைதளம் உள்ளிட்ட பிற செயலிகளை பயன்படுத்தும் போதும் ஒருவித மன அழுத்தத்தை உணரும் நாம், சில நிமிடங்களிலேயே மீண்டும் செல்போனை பயன்படுத்தும் கட்டாயத்திற்கு ஆளாகிறோம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக செல்போன் திரையில் பிரதிபலிக்கும் ஒளியை தொடந்து பார்த்துக்கொண்டிருப்பதால் ஹார்மோன் ரீதியிலான மாற்றங்களும் நிகழ்ந்து, சீரற்ற இதயத்துடிப்பு, சர்க்கரை வியாதி மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்களுக்கும் ஏற்படுகின்றன.
இதனிடையே உலகில் உள்ள மக்கள் தொகையை விட அதிகளவு செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளது என உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.