*செலுத்தப்பட்ட வருமான வரியில், திருப்பி பெறப்படும் தொகை குறித்த மின்னஞ்சல், குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் - வருமான வரித்துறை.
*தனிநபர் அடையாள எண், ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல், ஆதார் எண், வங்கி வாடிக்கையாளர் அடையாளம், ஏடிஎம் கடவு எண் போன்ற தனி நபரின் நிதி தொடர்பான எந்த தகவல்களையும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, தொலைபேசி மூலம் வருமான வரித்துறை கேட்பதில்லை.
*வருமான வரி செலுத்துவோர் தமது முகவரி, வங்கி கணக்கு எண் போன்ற தனிநபர் தகவல்களை வருமான வரித்துறையின் incometaxindiaefiling.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.
*அதில் வருமான வரி செலுத்துவோருக்கு துறை மூலம் அனுப்பப்படும் மின்னஞ்சல், குறுஞ்செய்திகளின் பட்டியல் இடம் பெற்றுள்ளது.