Type Here to Get Search Results !

அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ! அக்னி நட்சத்திரம் வரலாறு தெரியுமா? என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?


நடைபெறும் விகாரி வருடம்

*சித்திரை 21 சனிக்கிழமை மே 04/2019 துவங்கி வைகாசி 15 புதன்கிழமை மே 29/2019 நிவர்த்தியாகிறது !


அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.
என்றாலும், சித்திரை மாதம், பரணி 3வது பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலம் அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது.

இந்த காலத்தில் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் நேரம்.

அப்போது சூரியனுக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுக்கப்படுகிறது. சூரியன் என்பது விண்மீன் தான். மற்ற காலங்களில் நாம் அதனை சூரியன் என்கிறோம்.

அக்னி நட்சத்திரம் ஆண்டுதோறும் 21 நாட்கள் வருகின்றன.

அக்னி நட்சத்திர நாளில் சந்திரன் மட்டுமல்லது. பூமி கூட சூரியனுக்கு சற்று அருகே இருக்கும். அக்னி நட்சத்திரம் என்பது சூரியனுடைய சஞ்சாரம் தொடர்பாக அமையும் காலப்பகுதியாகும்.

பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த பகுதியாகும். இந்நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும், இடையில் ஏழு நாட்கள் மிக அதிகமாகவும் கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பத்தை தரும்.

*அக்னி நட்சத்திர வரலாறு :


முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும். எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான்.

அவ்வனத்தில் உள்ள அரக்கர்களும் கொடிய விலங்குகளும் தாவரங்களும் சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னி தேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன. அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்' என வருணன் கூறினான்.

இதையறிந்த அக்னி தேவன் கிருஷ்ணரிடம் ஓடி, நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்' என முறையிட்டான். கிருஷ்ணன் அர்ஜூனனைப் பார்த்தார். அர்ஜூனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான். அப்போது அக்னி தேவன் தன் ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க முற்பட்டான்.

அப்போது கிருஷ்ணர், 21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். அதற்குள் உன் பசியைத் தீர்த்துக் கொள்' என்றார். அதன்படி அக்னி தேவன் காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன் பசி தணிந்த அந்த 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர தினம் என்று சாஸ்திரங்களில் கூறுப்படுகிறது.

அக்னி நட்சத்திரத்தில்
என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

நமது தமிழர்களை பொறுத்தவரை பழங்காலத்திலிருந்தே மாதங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம்.

தமிழ் மாதங்கள் மொத்தம் 12 ஆகும். பண்டைய தமிழர்கள் இரண்டு வகையாக மாதங்களை குறித்து வந்துள்ளார்கள். பூமிக்கு சார்பாக சூரியனின் இயக்கத்தை வைத்தும், பூமிக்கு சார்பாக சந்திரனின் இயக்கத்தை வைத்தும் மாதங்களை கணக்கிட்டார்கள். அவையாவன : சூரிய மாதம் என்றும் சந்திர மாதம் என்றும் வழங்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் முதலாமானவள் என்ற சிறப்பை பெற்றவள் சித்திரைத் தாய்.

*அக்னி நட்சத்திரம் ஆரம்பம் :
-----------------------------------------------
சூரியனின் ஒளிதான் நம் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன் படி சூரியனின் அதிஉச்ச காலமான அக்னி நட்சத்திரத்தில் சில சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பார்கள்.

அர்ஜுனன் காண்டவ வனம் எனும் இந்திரனின் வனத்தை எரித்த காலம் அக்னி நட்சத்திரக் காலம் என்றும் சொல்லப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் சிவாலயங்களில் இறைவனுக்கு தாராபிஷேகம் செய்விப்பார்கள்.

அதன்படி இந்த

*அக்னி நட்சத்திரத்தில் கத்திரி வெயிலின் போது வீடு கட்ட ஆரம்பிப்பது மற்றும் அதற்கான கிணறு வெட்டுதல், பூமிபூஜை செய்வது, விவசாய விதைப்பு வேலைகள், மரம் வெட்டுதல், குழந்தைகளுக்கு காது குத்தி மொட்டையடித்தல் போன்றவைகளைத் தவிர்ப்பது நல்லது.

*அதேநேரத்தில் கட்டிய வீட்டில் குடிபுகுதல், வாடகை வீடு மாறுதல், நிச்சயதார்த்தம், பெண் பார்த்தல், திருமணம், சீமந்தம், உபநயனம் போன்ற சுபகாரியங்கள் செய்யத் தடையில்லை.

ஜோதிடரீதியாக இது சில விஷயங்களுக்கு தோஷ காலம் எனப்படுவதால் பழமையான

*சிவன் கோவில்களில் சர்வேஸ்வரனுக்கு அபிஷேகம் செய்விப்பது சகல தோஷத்தையும் நீக்கும்."

*சித்திரை திருவோண நடராஜர் அபிஷேகம் :

*நடராஜருக்கு தேவர்களின் கணக்குப்படி ஆறுகால அபிஷேகமாக ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேகம் செய்வார்கள். அதில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் செய்யப்படும் அபிஷேகம் நடைபெறும்  சித்திரை 14 சனிக்கிழமை மே 27, 2019 அன்று நடைபெறும். உச்சிகால அபிஷேகமான இதை தரிசித்தால், பிறப்பில்லா பேரின்ப நிலையை எட்டலாம் என்பது ஐதீகம்.


Top Post Ad

Below Post Ad