தமிழகத்தில் தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் அட்சயதிரிதியை முன்னிட்டு மேலும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த வாரம் அதிகபட்சமாக ஏப்ரல் 27-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 55-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.24 ஆயிரத்து 440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 2-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.24 ஆயிரத்து 1 6-க்கும், நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 992-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 936-க்கும் விற்பனை செய்யப் பட்டது.
கடந்த ஒரு வார விலையை ஒப்பிடுகையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.504 குறைந்துள்ளது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.39.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.39 ஆயிரத்து 500-க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.