Type Here to Get Search Results !

தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு; சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; வானிலை மையம்




வரும் 12-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகபட்சமாக 108 டிகிரி பாரன்ஹுட் வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. அதற்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த நான்கு நாட்களாக வெப்ப காற்றும் வீசியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பகலில் மாலை 4 மணி வரை வெளியில் வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டது. தமிழகத்தில் நேற்று முன்தினம் நிலவிய வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகி பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூரில் 90 மிமீ மழை பெய்தது. மதுரை தல்லாகுளம் 50 மிமீ, தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, திருமங்கலம் 40 மிமீ, நெய்வேலி, ஓசூர் 30 மிமீ, கரூர், பாலக்கோடு, 20 மிமீ, தளி, செஞ்சி, தாளவாடி, சூளகிரி, ஸ்ரீபெரும்புதூர், போளூர் 10 மிமீ மழை பெய்துள்ளது. இது தவிர காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் வெயிலின்தாக்கம் சற்று குறைந்துள்ளது. சேலத்தில் 3-வது நாளாக மழைசேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3-வது நாளாக மழை பெய்து வருவதால் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. புதுப்பாளையம் சின்னகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரமாக மழை பெய்தது. தற்போது பெய்து வரும் மழை நீரை உரிய முறையில் பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


Top Post Ad

Below Post Ad