Type Here to Get Search Results !

இயற்கை பேரிடர் குறித்து அலர்ட் செய்யும் புதிய ஆப் வீட்டிற்கு ஒருவர் வீதம் 1 கோடி பேர் டவுன்லோடு செய்ய ஏற்பாடு  












இயற்கை பேரிடர் குறித்து அலர்ட் செய்யும் வகையில் ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.


 இந்த ஆப்பை வீட்டிற்கு ஒருவர் வீதம் 1 கோடி பேர் டவுன் லோடு செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு நடந்து வருகிறது என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.


 இயற்கை பேரிடர் காலகட்டங்களில் பொதுமக்கள் விழிப்புணர்வு உடன் இருக்க மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி, மழையின் அளவு, வெள்ளம், அனல் காற்று தொடர்பாக ஒவ்வொரு பகுதிக்குமான முந்தைய தகவல்கள், நிகழ்கால தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் tnsmart app உருவாக்கப்பட்டுள்ளது.


 இந்த ஆப் மூலம் பருவ நிலை மாற்றங்களையும், அதன் பாதிப்புகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

மேலும், நாம் செல்லும் இடங்களின் வானிலை நிலை தொடர்பாக தகவல் உடனுக்குடன் வழங்கி எச்சரிக்கை விடுக்கிறது. தற்போது இந்த ஆப்பை 40 லட்சம் பேர் மட்டுமே பயன்படுத்தும் அளவுக்கு உள்ளது.


இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இந்த ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகப்படுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது.


 இதற்காக, ரூ.65 லட்சம் செலவில் புதிதாக சர்வர் வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு வீட்டிற்கு ஒருவர் என 1 கோடி பேர் இந்த ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ளள்ள முடியும்.

 இதற்காக, பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மே இறுதிக்குள் இப்பணிகள் முழுவதுமாக முடிந்து விடும்.


அதன்பிறகு 1 கோடி பேர் எந்தவித இடர்பாடுகள் இன்றி இந்த ஆப்பில் தகவல்களை பார்க்க முடியும் என்று பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் கூறும் போது, தற்போது நகர்பகுதிகள் மட்டுமின்றி கிராமப்புற பகுதிகளில் ஆன்ட்ராய்டு மொபைல் போனை அதிகம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் டிஎன் ஸ்மார்ட் ஆப்பை டவுன்லோடு செய்து வானிலை நிலவரத்தை அறிந்து கொள்ள முடியும்.


அதாவது, அவர்களது பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பது குறித்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் ஆடு, மாடு மேய்க்க சென்றால் கூட கிராம மக்கள் அலர்ட்டாகி வீடு திரும்புவார்கள்.


இதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். ஒரு ஊரில் இருந்து இன்னொரு பகுதிக்கு வாகனங்களில் செல்வோர் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

பேரிடர் காலகட்டங்களில் எங்கேயாவது ஒருவர் சிக்கி கொண்டால் இந்த ஆப் மூலம் அவர்களுக்கு மெசேஜ் அனுப்பினால் போதும்.


அவர்களது தகவல் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு செல்லும் என்பதால், சிக்கியவர்களை எளிதாக மீட்க முடியும்’ என்றார்


Top Post Ad

Below Post Ad