Type Here to Get Search Results !

வெடிகுண்டுடன் கார் மற்றும் வேன் கொழும்புவில் சுற்றுவதாக தகவல்... உச்சகட்ட எச்சரிக்கை...!

கொழும்பு நகரில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் மற்றும் வேன் சுற்றுவதாக கிடைத்த தகவலை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டியையை ஒட்டி இலங்கையின் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டலை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

குண்டுவெடிப்பில் 10 இந்தியர்கள் உள்பட 310-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விவாதிக்க, இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது.

உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதற்காக அரசு மன்னிப்பு கோரியது.


பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தனே “நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.


மேலும், “இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத், இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.


இந்நிலையில், கொழும்பு நகரில் வெடிகுண்டுடன் கார் மற்றும் வேன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, அனைத்து காவல் நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தொடர் குண்டுவெடிப்பில் இருந்து மீளாத இலங்கை மக்கள், தற்போது மேலும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Source News18 Tamilnadu


Top Post Ad

Below Post Ad