'வருமான வரி ' என, வருமான வரி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் மாத சம்பளதாரர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் உட்பட அனைவரும், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது அவசியம். 'ரீபண்ட்' எனும் திரும்பப் பெறும் தொகை இல்லாமல், 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் நபர்கள், வருமான வரி அலுவலகத்தில், நேரடியாக கணக்கு தாக்கல் செய்யலாம்.
ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டு வோர்,இணையதளம் வாயிலாக,கணக்கு தாக்கல் செய்யும் முறை நடை முறையில் உள்ளது. இந்த ஆண்டு முதல், விண்ணப்ப படிவம்வாயிலாக, கணக்கு தாக்கல்செய்வது, நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து, வருமான வரி துறை அதிகாரிகள் கூறியதாவது:'ரீபண்ட்' இல்லாமல், ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர், வருமான வரி அலுவலகத்தில், நேரடியாக வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை இருந்தது.
இந்த ஆண்டு முதல், இந்த நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது. 80 வயதுக்கு கீழ் உள்ள யாரும், நேரடியாக வருமான வரி அலுவலகத்தில், கணக்கு தாக்கல் செய்ய முடியாது.அனைத்து தரப்பினரும், 'ஆன்லைன்' வழியாக மட்டுமே, கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள், நேரடியாகவோ, ஆன்லைன் வழியாகவோ கணக்கு தாக்கல் செய்யலாம். இந்த ஆண்டு முதல், இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.