Type Here to Get Search Results !

உடல் எடையை குறைக்கும் போது உடலில் உண்டாக கூடிய மாற்றங்கள் என்னென்ன?


உடல் எடையை குறைக்க என்னென்னவோ செய்வோம். ஆனால், உடல் எடை குறைந்த பாடில்லை. இதனால் மன உளைச்சல், உடல் நல கோளாறுகள் தான் வருகின்றன. உடல் எடையை குறைக்க ஒவ்வொருவரும் பலவித வழிகளை பின்பற்றி வருகின்றனர். ஆனால், உண்மையிலே உடல் எடையை குறைக்கும் போது எப்படிப்பட்ட மாற்றங்கள் நம் உடலில் உண்டாகும் என்பதை பற்றி நமக்கு தெரியாது.


உடல் எடையை குறைப்பதால் மூளையிலும், உடலில் பல இடங்களிலும் எண்ணற்ற மாற்றங்கள் உண்டாகும். அவை எப்படிப்பட்ட மாற்றங்கள் என்பதை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

மூளை திறன்


உடல் எடையை குறைப்பதால் மூளையின் திறன் அதி வேகமாக செயல்படும் என ஆய்வுகள் சொல்கின்றன. நாம் செய்கின்ற ஒவ்வொரு பயிற்சிகளும் தான் இந்த நிலைக்கு காரணம். உடல் எடையை குறைப்பதோடு மூளையின் திறனையும் அதிகரிக்க இந்த வகை பயிற்சிகள் உதவுகின்றன.

இளமை

உடல் எடையை கச்சிதமாக வைத்து கொண்டால் நீண்ட காலம் இளமையாக இருக்கலாம். சருமம் முதல் உடல் தசைகள் வரை வலு பெறும். கூடவே எப்போதுமே புத்துணர்வுடன் இருக்க வழி செய்யும். சருமத்தில் உள்ள செல்கள் மறு சுழற்சி பெறவும் இது உதவும்.

தட்பவெப்பம்

எடையை குறைக்க முற்படும் போது உடலில் பலவித மாற்றங்கள் உண்டாகும். அதில் ஒன்று தான் தட்பவெப்ப மாற்றமும். எடையை குறைப்பதால் உடல் மிகவும் சில்லென்று மாற கூடும். வெப்ப நிலை குறைந்து நீங்கள் குளிர்ச்சியாக உணர்வீர்கள்.

தலை வலி

சிலருக்கு அவ்வப்போது தலை வலி ஏற்பட கூடும். இதற்கும் எடையை குறைப்பதற்கும் ஒரு விதத்தில் சம்பந்தம் உள்ளது. உடலில் உள்ள கொழுப்பு செல்கள் வீக்கம் பெறுவதால் இப்படிப்பட்ட நிலை உண்டாகிறது.

பசி

உடல் எடையை குறைக்க தொடங்கிய பின்னர் உங்களது பசி அதிகரிக்க தொடங்கி விடும். அதிகமாக பசி எடுப்பதால் கண்ட உணவுகளை சாப்பிட்டு விட கூடாது. பிறகு நீங்கள் மேற்கொண்ட விரதம் வீணாகி விடும்.

குறட்டை

குறட்டை பிரச்சினை இருப்போருக்கு உடல் எடை குறைப்பு சிறந்த தீர்வாகும். உடல் எடையை குறைக்க ஆரம்பித்ததில் இருந்தே நீங்கள் இந்த குறட்டை பிரச்சினையில் இருந்து தப்பித்து கொள்ளலாம். மேலும், நிம்மதியான ஆழ்ந்த தூக்கமும் வரும்.

மாதவிடாய்

சில பெண்களுக்கு உடல் எடை குறைக்க ஆரம்பித்த பிறகு உடலில் மாதவிடாய் சுழற்சி மாற்றம் பெறும். இதற்கு காரணம், ஹோர்மோன் மாற்றம் தான். உடல் எடையை குறைக்கும் போது ஹார்மோன் மாற்றமும் ஏராளமான அளவில் நிகழுமாம்.


Top Post Ad

Below Post Ad