எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு ஒப்புகைச்சீட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 5 ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் பொருத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதில் பதிவான மொத்த ஒப்புகை சீட்டுகளில் 5 சதவீத ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக உட்பட நாடு முழுவதும் உள்ள 21 எதிர்க்கட்சிகள் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தற்போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தற்போது ஒரு தொகுதியில் 1% ஒப்புகைச் சீட்டு மட்டுமே எண்ணப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.