Type Here to Get Search Results !

வீட்­டுக்­க­டனை மாற்­றும் முன் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள்

அதிக வட்டி விகிதம் காரணமாக, வீட்டுக்கடனை வேறு வங்கிக்கு மாற்றும் வாய்ப்பை நாடும் போது பரிசீலிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

வீட்­டுக்­க­டனை தேர்வு செய்­யும் போது மட்­டும் அல்ல, அதற்கு பின்­ன­ரும் கூட வட்டி விகி­தத்­தில் தொடர்ந்து கவ­னம் செலுத்த வேண்­டும். கட­னுக்­கான வட்டி விகி­தம் நிச்­ச­யம் மாதத்­த­வ­ணை­யின் மீது தாக்­கம் செலுத்­தும்.

மேலும் வீட்­டுக்­க­டன் என்­பது நீண்ட கால பொறுப்பு என்­ப­தால், வட்டி விகி­தம் அதி­கம் எனில் திரும்­பச் ­செ­லுத்­தும் தொகை­யும் அதி­கமாக இருக்­கும். இதில் கணி­ச­மான தொகை வட்­டிக்கே சென்­று­வி­டும். எனவே தான், கட­னுக்­கான வட்டி விகி­தத்­தின் மீது, ஒரு கண் வைத்­தி­ருக்க வேண்­டும். ஏற்­க­னவே செலுத்­திக் ­கொண்­டி­ருக்­கும் வட்டி விகி­தம் அதி­க­மாக இருந்­தால், குறை­வான வட்டி விகி­தம் அளிக்­கும் வங்­கிக்கு வீட்­டுக்­க­டனை மாற்­றிக் ­கொள்­ள­லாம்.

பொது­வாக, வீட்­டுக்­க­டனை மாற்­றும் போது, புதிய வங்கி கடன் தொகையை முழு­வ­தும் செலுத்தி, அந்த கடனை மாற்­றிக்­கொள்­கிறது. கடன் பெற்­ற­வர் புதிய வங்­கி­யில் புதிய வட்டி விகி­தத்­தில் மாதத்­தவணை செலுத்­தத்­ து­வங்­கு­கி­றார். வட்டி விகி­தத்­தில் வேறு­பாடு உள்ள சூழ­லில் இந்த வச­தியை பயன்­ப­டுத்­திக்­கொள்­வது பொருத்­த­மா­னது என்­றா­லும், வீட்­டுக்­க­டனை மாற்­று­வ­தற்கு முன், கவ­னத்­தில் கொள்ள வேண்­டிய முக்­கிய அம்­சங்­களும் இருக்­கின்­றன.

வீட்­டுக்­க­ட­னுக்கு ஒரு­வர் செலுத்­தும் வட்டி விகி­தம், சந்­தை­யின் தற்­போ­தையை வட்டி விகி­தத்தை விட அதி­க­மாக இருந்­தால், குறை­வான வட்டி விகித பல­னைப்­பெற, வீட்­டுக்­க­டனை மாற்­றிக்­கொள்­ள­லாம் என்று கரு­தப்­ப­டு­கிறது. ஆனால், ஏற்­க­னவே கணி­ச­மான ஆண்­டு­கள் கடனை செலுத்தி விட்­ட­வர்­கள் அல்­லது கடனை முடிக்­கும் நிலையில் உள்­ள­வர்­களை விட, கட­னின் ஆரம்ப காலத்­தில் இருப்­ப­வர்­க­ளுக்கே இது அதிக பயன் அளிக்­கும்.

ஏனெ­னில், கட­னின் ஆரம்ப காலத்­தில் தான், வட்­டிக்கு பிடித்­தம் செய்­யப்­படும் தொகை அதி­க­மாக இருக்­கும். மேலும், வீட்டை விற்­கும் வாய்ப்பை எதிர்­நோக்­கி­யுள்­ள­வர்­களுக்­கும் இந்த வாய்ப்பு பொருத்­த­மாக இருக்­காது. நிலு­வை­யில் உள்ள தொகை­யும் முக்­கிய அம்­ச­மா­கும்.கடனை மாற்­று­வது என்­ப­தும் கிட்­டத்­தட்ட புதி­தாக கடன் பெறு­வது போல தான். எனவே, ஒரு­வ­ரது கிரெ­டிட் ரேட்­டிங்­கும் பரி­சீ­லிக்­கப்­படும். கடன் பெற்­ற­தற்கு பிறகு கிரெடிட் ரேட்­டிங் நன்­றாக இருக்­கி­றதா என்­ப­தை­யும், கடன் மாற்ற விரும்­பு­கி­ற­வர் தெரிந்து கொள்ள வேண்­டும்.

கிரெ­டிட் ரேட்­டிங்­கில் ஏதே­னும் பாதிப்பு இருந்­தால், அது கடனை மாற்­றும் வாய்ப்­பை­யும் பாதிக்­க­லாம். கிரெ­டிட் ரேட்­டிங் தவிர, கடனை முன்­கூட்­டியே முடிப்­ப­தால் ஏதே­னும் அப­ரா­தம் அல்­லது கட்­ட­ணம் செலுத்த வேண்­டுமா என்­ப­தை­யும் தெரிந்து கொள்ள வேண்­டும். இது தொடர்­பான விதி­மு­றை­களை அறிந்­தி­ருப்­ப­தும், வங்­கி­யி­டம் உறு­தி­யாக பேசி சாத­க­மான பலனை பெற உத­வும்.

வட்டி விகி­தத்­தில் உள்ள வேறு­பாடு அளிக்­கும் பலனை கணக்­கிட்டு பார்ப்­ப­தோடு, மாற்­றத்­திற்கு விதிக்­கப்­ப­டக்­கூ­டிய வேறு பல கட்­ட­ணங்­க­ளை­யும் சேர்த்­துக்­கொள்ள வேண்­டும். புதிய வங்­கிக்கு செயல்­முறை கட்­ட­ணம் செலுத்த வேண்­டும். இது, கடன் தொகையை, ௧ சத­வீ­த­மாக இருக்­க­லாம். இன்­ன­மும் பொருந்­தக்­கூ­டிய செல­வு­களை சேர்த்த பிற­கும் அனுகூலம் இருந்­தால், கடனைமாற்­றிக்­கொள்ள தீர்­மா­னிக்­க­லாம்.

வேறு வங்­கிக்கு மாற்­று­வது தவிர, பழைய பேஸ் ரேட்­டில் கடன் பெற்­ற­வர்­கள் கூட, தங்­கள் கடனை புதிய முறைக்கு மாற்­றிக்­கொள்­ளும் வாய்ப்பை பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம். ஒரே வங்­கி­யில் மாற்­றிக்­கொள்­ளும் போது, இதற்­கான செயல்மு­றை­யும் எளி­தாக இருக்­க­லாம்.
நன்றி தினமலர்


Top Post Ad

Below Post Ad