Type Here to Get Search Results !

பாஸ்வேர்டை தவறாக கிறுக்கிய குழந்தை - 48 வருடங்கள் முடங்கிய ஐ-பேட்

குழந்தை தவறாக பாஸ்வேர்டை பதிவு செய்ததால் பத்திரிகையாளர் ஒருவரின் ஐ-பேட் 48 வருடங்கள் முடங்கியுள்ளது.

இந்திய சந்தை உட்பட உலகம் முழுவதும் விலையுர்ந்த போன்களில் ஒன்றாக கருதப்படுவது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் அல்லது ஐ-பேட் ஆகும். பொதுவாக ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துவோர் ஐ-பேட் அல்லது ஐ-போனை பயன்படுத்தினால் புதுமையாகவும், சற்று சவாலாகவும் இருக்கும். ஏனென்றால் அதில் ஆப்ஷன்கள் அனைத்தும் வேறுபாடாக இருக்கும். குறிப்பாக வேறு எந்தபோனில் இருந்தும் ஐ-போனிற்கு டேட்டாக்களை அனுப்பவோ, பெறவோ முடியாது. அதேபோன்று கூடுதலாக மைக்ரோ சிப்பை பொறுத்தி மெமரியை அதிகரித்துக்கொள்ள முடியாது. இவையெல்லாம் செல்போனின் டேட்டாக்கள் மற்றும் அதை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட பாதுகாப்பு வசதிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஐ-போனின் சிறப்பம்சங்கள் ஆகும்.

googletag.pubads().definePassback('/76299822/ART-INN-728-90', [728, 90]).display();

ஆனால் இதில் சில பாதகங்களும் இருக்கின்றது என்பதை உணர்த்து வகையில் அமெரிக்க பத்திரிகையாளர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தின் லண்டன் நகரத்தை சேர்ந்தவர் இவான் ஆஸ்நாஸ். இவர் 'தி நியூ யார்கர்' என்ற வாரம் இருமுறை வெளியாகும் அமெரிக்க பத்திரிகையில் பணிபுரிந்து வருகிறார். ஐ-பேடை பயன்படுத்தும் இவர், ஓய்வு நேரத்தில் அதை தனது வீட்டில் வைத்துள்ளார். அப்போது அவரது 3 வயது குழந்தை ஐ-பேடை எடுத்து பாஸ்வேர்டை தவறாக பதிவு செய்துள்ளது. 

விவரம் அறியாத குழந்தை அதேபோன்று பலமுறை செய்து விளையாடியுள்ளது. ஆனால் இந்த செயலால் அவரது ஐ-பேட் 25,536,442 நிமிடங்கள் முடங்கியுள்ளது. எளிதாக சொல்ல வேண்டுமென்றால் 48 வருடங்கள் முடங்கியுள்ளது. இதை ஆஸ்நாள் தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் இதற்கு ஆலோசனை இருந்தால் சொல்லுங்கள் எனவும் அவர் வினவியுள்ளார். 


Top Post Ad

Below Post Ad