தமிழகத்தில் காலியாக உள்ள ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22 முதல் 29 வரை செய்யலாம், ஏப்ரல் 30 அன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தகவல் வெளியீட்டுள்ளது.