குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடந்து முடிந்து ஒரே மாதத்தில் அதன் முடிவுகளை இணையதளத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 1 பிரிவில சிவில் சர்வீஸ், காவல்துறை, வருமான வரித்துறை, பதிவுத் துறை, தமிழக பொதுத் துறை, தமிழக தீயணைப்புத் துறை உள்ளிட்டவைகளில் மொத்தமாக 139 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கையை கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டது.
அதன்படி, குரூப் 1 முதல்நிலைத் தேர்வுகள் கடந்த மார்ச் 3ம் தேதி நடந்தது. இந்த தேர்வுக்கான முடிவுகள் தற்போது இணைதளத்தில் வெளியாகி உள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை http://www.tnpsc.gov.in என்ற இணைய முகவரியில் அறியலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஜூலை 12,13,14ஆம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதில் வெற்றி பெற்றால் அடுத்து நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். இறுதியாக வெற்றி பெற்றவர்களின் பட்டியல் அதன் பின்னர் வெளியாகும்