உலக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள வாட்ஸ்அப் தகவல் பயன்பாட்டு சமூக வலைதளம், பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு புதுப்புது அம்சங்களை உட்புகுத்தி மெருகேற்றி வருகிறது.
சமீபத்தில், வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களை அடுத்தவர்கள் காண முடியாதவாறு, முக அடையாளம் மற்றும் விரல் ரேகை மூலம் பாதுகாக்கும் புதிய பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்தியது
இந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள வாட்ஸப் சோதனை பதிப்பில் புதிய வசதியாக படங்களை தேடும் வசதி உள்பட மேலும் பல புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இவற்றில் மிக முக்கியமாக வாட்சப் மூலம் உங்களுக்கு வரும் படத்தை கூகிள் Reverse Image Search மூலமாக அந்த படம் சம்பந்தமான செய்திகளையும் நம்மால் காணவியலும், இதன் மூலம் உங்களுக்கு வரும் படங்களின் நம்பகத் தன்மையை அறிந்துகொள்ளலாம்
இந்த சேவையை வாட்ஸப் நிறுவனம் கூகிள் நிறுவனத்தின் image search வசதியை பயன்படுத்துவது குறிப்பிட்டத்தக்கது
ஆனால் இது சோதனை பதிப்பில் மட்டுமே உள்ளது, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
தற்போது தேர்தல் நேரமென்பதால் வெளிவரும் செய்திகளையும், படங்களையும் உடனுக்குடன் சரிபார்க்க உதவும்