Type Here to Get Search Results !

எத்தனை முறை பார்வேர்ட் செய்கிறோம் ? வாட்ஸ்அப்பில் புதிய வசதி

எத்தனை முறை ஒரு குறுஞ்செய்தி பார்வேர்ட் (forward) செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் புதிய முறை, வாட்ஸ் அப் பீட்டா வெர்சனில் அறிமுகமாகி உள்ளது


வாட்ஸ் அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த செயலியை உலகம் முழுவதிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர் வாட்ஸ்அப்பின் முக்கிய பிரச்னையாக இருப்பது போலிச்செய்திகள் பரவுவது இதனை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் பல மாறுதல்களை கொண்டு வருகிறது பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது அப்டேட்டுகளை வாட்ஸ் அப் கொடுத்து வருகிறது இந்நிலையில் எத்தனை முறை ஒரு குறுஞ்செய்தி பார்வேர்ட் (forward) செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் புதிய முறை வாட்ஸ் அப் சோதனை முறையில் அறிமுகமாகி உள்ளது


வாட்ஸ் அப்பின் சோதனை ஓட்ட பதிவு எனப்படும் பீட்டா வெர்சனில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பார்வேர்ட் செய்யும் குறுஞ்செய்தியை கிளிக் செய்து 'i' என்ற பொத்தானை அழுத்தினால் எத்தனை முறை அந்த குறுஞ்செய்தி பார்வேர்ட் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் காட்டப்படுகிறது நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட முறை பார்வேர்ட் செய்யப்படும் செய்திகளாக இருந்தால் , "அடிக்கடி பார்வேர்ட் செய்யப்படுகிறது" (Frequently Forwarded) என்ற தகவலும் இணைத்து காட்டப்படுகிறது தவறான மற்றும் போலி செய்திகளை குறைக்க இந்த புதிய வசதியை அமல்படுத்தி உள்‌ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது


Top Post Ad

Below Post Ad