Type Here to Get Search Results !

60 வயதை கடந்தால் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம்






 





மத்திய அரசு தனது பங்காக செலுத்தும். 60 வயது பூர்த்தியாகும் நிலையில் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

மத்திய அரசின் மாதாந்திர ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் தெருவோர விற்பனையாளர்கள், ஆட்டோ-ரிக்‌ஷா டிரைவர்கள், சுமைதூக்குவோர், கட்டிட பணியாளர்கள், தினக்கூலிகள், விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், செருப்பு தைப்பவர்கள், தையல் கலைஞர்கள், ஒலி-ஒளி அமைப்பாளர்கள், செங்கல் சூளை பணியாளர்கள், சலவையாளர்கள் மற்றும் ஏனைய அமைப்பு சாரா துறையை சேர்ந்த அனைத்து தொழிலாளர்களும் பயனடையலாம்.

இத்திட்டத்தில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட, வருமான வரி வரம்புக்கு உட்படாத மற்றும் இ.பி.எப்.-இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் உறுப்பினர் அல்லாத ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாக மாத வருமானம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களும் இணையலாம்.

மாதந்தோறும் ஒரு சிறு தொகையை சேமிப்பு வங்கியின் வாயிலாக செலுத்தி வந்தால், அதற்கு ஈடான தொகையை மத்திய அரசு தனது பங்காக செலுத்தும்.


 60 வயது பூர்த்தியாகும் நிலையில் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் சேர விரும்புவோர் ஆதார் எண், வங்கி கணக்கு விவரம் மற்றும் செல்போன் எண்ணுடன் அருகில் உள்ள வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஆயுள் காப்பீட்டுக் கழகம், தொழிலாளர் காப்பீட்டு கழகம் போன்ற மத்திய அரசு தொழிலாளர் நல அலுவலகங்கள் மற்றும் மாநில அரசு தொழிலாளர் நல அலுவலகங்களை அணுகலாம்.


 உறுப்பினர்களை இணைக்கும் பணி தாம்பரத்தில் உள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்திலும் நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட தகவல் மண்டல வருங்கால வைப்புநிதி கமிஷனர் ப.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Top Post Ad

Below Post Ad