Type Here to Get Search Results !

ஏப். 4ந்தேதி முதல் 14ந்தேதி வரை விரைவு ரெயில்கள் ரத்து

அரக்கோணம்-தக்கோலம் இடையே புதிய ரெயில் பாதையில் சிக்னல்கள் மற்றும் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் வரும் ஏப்ரல் 4-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை விரைவு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டம் அரக்கோணம்-தக்கோலம் இடையே புதிய ரெயில் பாதையில் சிக்னல்கள் மற்றும் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் வரும் ஏப்ரல் 4-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை சென்னை-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் பல்வேறு ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 இதுகுறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்ட்ரலில் காலை 7.25 மணிக்கு புறப்படும் டபுள் டெக்கர் அதிவிரைவு ரெயில் (22625) ஏப்ரல் 11,12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. பெங்களூருவில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் டபுள் டெக்கர் அதிவிரைவு ரெயில் (22626) ஏப்ரல் 11,12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் பெங்களூரு சதாப்தி ரெயில் (12027) ஏப்ரல் 14-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும். பெங்களூருவில் காலை 6 மணிக்கு சென்னை நோக்கி புறப்படும் சென்னை சதாப்தி அதிவிரைவு ரெயில் (12028) ஏப்ரல் 14-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும்.பெங்களூரு - சென்னை அதிவிரைவு ரெயில் (12608), காட்பாடி ஜங்‌ஷன் வரை இயக்கப்பட்டு, காட்பாடியில் இருந்து சென்னைக்கு ஏப்ரல் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் மைசூர்- சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரெயில் (12610) காட்பாடியில் இருந்து சென்னை சென்ட்ரல் இடையே ஏப்ரல் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ரத்தாகிறது.வாஸ்கோடகாமா- சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில் (17312) ஜோலார்பேட்டை வரை இயக்கப்படும். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு ஏப்ரல் 4 மற்றும் 11-ந் தேதியில் ரத்து செய்யப்படுகிறது.

ஹூப்ளி - சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில் (22679) ஏப்ரல் 6 மற்றும் 13-ந் தேதியில் ஜோலார்பேட்டை வரை இயக்கப்படும். அன்றைய தேதிகளில் ஜோலார்பேட்டையில் இருந்த சென்னை சென்ட்ரலுக்கு ரத்து செய்யப்படுகிறது.பெங்களூரு- சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில் (12640) ஏப்ரல் 14-ந் தேதி சோளிங்கர் வரை இயக்கப்பட்டு அங்கிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ரத்து செய்யப்படும்.

சென்னை சென்ட்ரல் - மைசூர் அதிவிரைவு ரெயில் (12609) சென்னை சென்ட்ரல் - சோளிங்கர் இடையே ஏப்ரல் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.சென்னை சென்ட்ரல் - பெங்களூர் அதிவிரைவு ரெயில் (12607) சென்ட்ரல் - சோளிங்கர் இடையே ஏப்ரல் 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல்- வாஸ்கோடகாமா விரைவு ரெயில் (17311) சென்னை சென்ட்ரல்- ஜோலார்பேட்டை இடையே ஏப்ரல் 5 மற்றும் 12-ந் தேதியில் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - ஹூப்ளி அதிவிரைவு ரெயில் (22698) சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை இடையே ஏப்ரல் 7 மற்றும் 14-ந் தேதியில் ரத்து செய்யப்படுகிறது.தனப்பூர்- பெங்களூரு இடையே இயக்கப்படும் சங்கமித்ரா அதிவிரைவு ரெயில் (12296) ஏப்ரல் 12-ந்தேதி கூடூர்- சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்- காட்பாடி வழியாக இல்லாமல், கூடூர்- ரேணிகுண்டா- திருப்பதி- காட்பாடி வழியாக இயக்கப்படும்.

பெங்களூரு- தனப்பூர் சங்கமித்ரா அதிவிரைவு ரெயில் (12295) ஏப்ரல் 5-ந்தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை காட்பாடி- அரக்கோணம், சென்னை சென்ட்ரல்- கூடூர் மார்க்கமாக இல்லாமல், காட்பாடி திருப்பதி- கூடூர் வழியாக இயக்கப்படும்.பெங்களூரு- தர்பாங்க் வரை இயக்கப்படும் பாக்மதி அதிவிரைவு ரெயில் (12578) ஏப்ரல் 13-ந் தேதி முதல் காட்பாடி- சென்னை சென்ட்ரல்- கூடூர் மார்க்கமாக இல்லாமல், காட்பாடி - திருப்பதி - கூடூர் வழியாக இயங்கும்.

யஷ்வந்த்பூர் - கமாக்கியா அதிவிரைவு ரெயில் (12552) ஏப்ரல் 3 மற்றும் 10-ந் தேதியில் காட்பாடி- சென்னை சென்ட்ரல்- கூடூர் வழியாக இல்லாமல், காட்பாடி - திருப்பதி - கூடூர் வழியாக இயக்கப்படும்.பெங்களூரு - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரெயில் (12658) ஏப்ரல் 13-ந் தேதி காட்பாடி- அரக்கோணம்- சென்னை சென்ட்ரல் மார்க்கமாக இல்லாமல் காட்பாடி- வேலூர்- திருவண்ணாமலை- விழுப்புரம்- எழும்பூர்- கடற்கரை வழியாக இயக்கப்படும்.


Top Post Ad

Below Post Ad