தமிழகத்தில் இந்த ஆண்டு இயல்பை விட 0.5 முதல் 1 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார். வானிலை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற அவர், வங்க கடல் மற்றும் அரபி கடலில் நிலவும் காற்றழுத்த பகுதியின் அமைப்பு, நகர்வு ஆகியவற்றின் வலுவை பொறுத்து கோடை மழை வரும் என தெரிவித்தார். மேலும் வானிலை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வானிலை ஆய்வு மையத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.