Type Here to Get Search Results !

சி.ஆர்.பி.எஃப். பற்றி தெரியுமா?

இந்திய ராணுவத்தில் தரைப்படை, விமானப்படை, கடற்படை உள்ளன. இவை ராணுவ அமைச்சகத்துக்குக் கீழ் செயல்படுபவை. குடியரசுத் தலைவர் முப்படைக்கும் தலைவர். ராணுவத்தில் இருந்து  சி.ஆர்.பி.எஃப் என்று அழைக்கப்படும் துணை ராணுவத்தினர் வேறுபடுகிறார்கள். சி.ஆர்.பி.எஃப். 1939-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும். கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் இதில் பணி புரிகின்றனர். உள்நாட்டு பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதுதான் இதன் முக்கிய பணி.


நக்ஸல்கள், தீவிரவாதிகளை வேட்டையாடுவதும் இவர்கள்தான். 1965-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் எல்லையையும் இவர்கள்தான் பாதுகாத்தனர். எல்லை பாதுகாப்புப் படை தனியாக உருவாக்கப்பட்ட பிறகு, அந்த அமைப்பின் வசம் பாகிஸ்தான் எல்லை ஒப்படைக்கப்பட்டது. 2001-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் 5 தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்தியதும் இவர்கள்தான். ஐ.நா அமைதிப்படைக்கும் இந்தியா சார்பில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்தான் பெரும்பாலும் அனுப்பப்படுவார்கள்

Top Post Ad

Below Post Ad