கடந்த பிப்.,14ம் தேதி அன்று, காஷ்மிர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சென்ற வாகனத்தை குண்டு வைத்து தகர்க்க செய்தனர். இதில் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 3.30 மணியளவில், பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் இடையில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள தீவிரவாதிகளின் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை வீசி இந்திய ராணுவ படை எதிர் தாக்குதல் நடத்தியது.
இந்திய விமான படையின் மிராஜ் 2000 ரக போர் விமானத்தின் மூலம் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
.