''நம் வீரர்களின் திறமை என்ன என்பது உலக நாடுகளுக்கு தெரியும். அதனால்தான் அண்டை நாடுகள் நம் நாட்டுக்கு எதிராக மறைமுக போரில் ஈடுபடுகின்றன. உடனடியாக களமிறங்குவதற்கு நம் விமானப் படை தயாராக உள்ளது'' என விமானப் படை தளபதி பி.எஸ். தனோவா கூறினார். ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ள நிலையில் இந்திய விமானப் படையின் முழு பலத்தை வெளிப்படுத்தும் வகையில் 'வாயு சக்தி' என்ற பெயரில் பிரமாண்டமான போர் ஒத்திகை நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடந்தது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில்
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு சமீபத்தில் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 40 வீரர்கள்கொல்லப்பட்டனர். 'இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்' என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பொக்ரானில் விமானப் படையின் முழு போர் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் விமானப் படையின் 140க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன.உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 'தேஜஸ்' இலகுரக போர் விமானம் அதிநவீன ஹெலிகாப்டர்கள் தரையில் இருந்து ஆகாயத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய 'ஆகாஷ்' ஏவுகணை'
உள்ளிட்டவை இந்த ஒத்திகையில் பங்கேற்றன. குறிப்பிட்ட இலக்கை துல்லிய மாக தாக்கி நம் விமானப் படையினர் தங்கள் முழு வலிமையையும் வெளிப்படுத்தினர்.
இதில் விமானப் படை தளபதி பி.எஸ். தனோவா பேசியதாவது: இதற்கு முன் பல போர்களை சந்தித்துள்ளோம். அதே நேரத்தில் மற்றவர்களுக்கு நாம் அச்சுறுத்தலாக இருந்த தில்லை.நம் படையின் பலம் என்ன நம் வீரர் களின் திறமை என்ன என்பது உலக நாடு களுக்கு தெரியும். அதனால்தான் அண்டை நாடுகள் நம் நாட்டுக்கு எதிராக மறைமுக போரில் ஈடுபடுகின்றனர்.
தேவை ஏற்பட்டால் உடனடியாக களமிறங்கு வதற்கு நம் விமானப் படை எப்போதும் தயாராக உள்ளது. அதை நிரூபிக்கவே இந்த போர் ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.