பிஎஃப் எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2018-19 ஆண்டுக்கான தொழிலாளர் வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%-இல் இருந்து 8.65%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வட்டி உயர்வின் மூலம் நாடு முழுவதும் சுமார் 6 கோடி வருங்கால வைப்பு நிதி பயனாளர்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.