1. கொத்தமல்லிச் சாற்றில் சுக்கை இழைத்து
நெற்றியில் பற்றுப்போட்டால் தலைபாரம், தலைவலி குணமாகும்.
2. கொத்தமல்லிச் சாற்றில் சந்தனப் பொடி குழைத்துப் பற்றுப்போட்டால் பித்தத்தால் ஏற்படும் தலைவலி சரியாகும்.
3. கொத்தமல்லியோடு சந்தனம், நெல்லிவற்றல் சேர்த்து தண்ணீரில் ஊறவைத்துக் குடித்தால் தலைச் சுற்றல் குணமாகும்.
4. புளிக்கரைசலில் உப்பைக் கரைத்து சூடுபடுத்தி, அதில் வாய் கொப்பளித்தால், பல் வலி, தலைவலி போன்றவை குணமாகும்.
5. நல்வேளைக் கீரையை அரைத்து தலையில் வைத்துக்கட்டினால், நெடுநாள் தொல்லைதரும் தலைவலி குணமாகும்.