டிக் டாக் செயலி கலாச்சாரத்தை சீர்கெடுக்கும் வகையில் இருப்பதாக அரசு எச்சரித்ததை அடுத்து, அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "வாடிக்கையாளர்களின் திறமைகளை ஊக்குவிப்பதே எங்கள் நோக்கம். எந்தவொரு தனிநபருக்கு எதிராகவோ சமூக விதிமுறைகளுக்கு புறம்பாகவோ பதிவிட்டால் வரம்புகளுக்கு உட்பட்ட நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்படும்" என்று கூறியுள்ளது.