'புல்லட்' ரயிலுக்கு, பொருத்தமான பெயர் மற்றும் சின்னம் வடிவமைக்கும் போட்டியை, மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டின், முதல் புல்லட் ரயில் திட்டம் விரைவில், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து, குஜராத்தில் உள்ள ஆமதாபாத் வரையில் இயக்கப்பட உள்ளது. புல்லட் ரயில் சேவைக்கு பொருத்தமான பெயரும், 'லோகோ' எனப்படும் சின்னமும் வடிவமைக்க, ரயில்வே நிர்வாகம் போட்டி அறிவித்துள்ளது. பெயர் மற்றும் சின்னம் வடிவமைப்பவருக்கு, ரொக்க பரிசுடன், சான்றிதழும் வழங்கப்படும். இது தொடர்பான மேலும் விபரங்களை, www.mygov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.